Tuesday 9 July 2019

ஜூலை 10 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 10 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      சந்திரயான் 2 விண்கலத்தின் எந்த சாதனத்துக்கு விக்ரம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது?
ஆர்பிட்டர்
லேண்டர்
ரோவர்
லேசர் கருவி

விடை: லேண்டர் ( ரோவர் கருவிக்கு பிரக்யான் என்ற பெயர் வைக்கப்பட்டு உள்ளது)

2)      எந்த மாநிலத்தில் பெண்கள் ஸ்டார்ட் அப் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது?
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
தெலுங்கானா

விடை: கேரளா (பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கேரள அரசு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. கேரளத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தொழில்களில் 13% பங்களிப்பில் பெண்கள் உள்ளனர்.  இதற்காக ‘கேரள ஸ்டார்ட் அப் மிஷன்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது இந்திய தொழிலகக் கூட்டமைப்பான சிஐஐ உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      உலக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
4
8
10
12

விடை: 10 ( சர்வதேச செலவாணி நிதியம் வெளியிட்டுள்ள ஜூலை 2019 அறிக்கையின் படி  618 டன் கையிருப்பில் உள்ளது. இது ஒட்டு மொத்த அந்நிய செலவாணி கையிருப்பில் 6.1 சதவீதம் ஆகும்.  கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கையிருப்பு 606 டன்னுடன் 11 வது இடத்தில் இருந்தது. இது தற்போது நெதர்லாந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளது)   ( முதல் இடத்தில் அமெரிக்கா 8,133.4 டன்னுடன் உள்ளது. இது அந்த நாட்டின் மொத்த தங்கம் கையிருப்பில் 74.5 % ஆகு. 2- ஜெர்மனி -3,367.9 டன், 3 –சர்வதேச செல்வாணி நிதியம் 2,814.0 டன்,  7 சீனா,   8-சுவிட்சர்லாந்து, 9 ஜப்பான் )

4)      தற்போது விம்பிள்டன் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தியை வென்ற அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கி எத்தனையாவது இடத்தில் உள்ளார்?
35
45
55
65

விடை: 55

5)      நாட்டின் மிக நீளமான மின்சார ரயில் சுரங்கம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
தெலுங்கானா

விடை: ஆந்திரா   (நெல்லூர் மாவட்டம் செர்லோபள்ளி மற்றும் ராபுரூ ரயில் நிலையங்களுக்கு இடையில் 6.6 கிலோ மீட்டார் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு மத்திய ரயில்வே 460 கோடி செலவில் 43 மாதங்களில் இந்த பணியை முடித்துள்ளது. (கல்விரகு கல்வி தந்திரம் சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்) இந்தச் சுரங்கத்தால் கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்துக்கும், ஒபுலவர்ப்பள்ளிக்கும் இடையிலான பயண நேரம் 10 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரமாக குறைந்துள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      சந்திராயன் 2 விண்கலத்தில் ரோவர் என்று அழைக்கப்படும் பிரக்யான் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள சாதனத்திற்கு எத்தனை சக்கரங்கள் உள்ளன?
4
6
8
10

விடை: 6 ( இந்த சந்திராயன் 2 விண்கலம் பூமியை சுற்றி 200 கி.மீ * 36,000 கி.மீ என்ற நீள்வட்டப்பாதையில் அனுப்பப்படும். சந்திராயன் சந்திரனில் தரையிரங்க ஐந்து 800 நியூட்டன் விசையுள்ள திரவ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  நிலவில் விக்ரம் மெதுவாக இறங்கி தூசுப்படலம் இல்லை என்பதை உறுதி செய்தப்பின் பிரக்யான் வெளிவந்து தன்னுடைய பணியைத் தொடங்கும் )


7)      மத்திய அரசு அறிவித்துள்ள ‘ஃபிட்னஸ் அண்ட் வெல்னஸ் கிளினிக்’ என்ற நல்வாழ்வு மருத்துவமனைகள் எத்தனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது?
25 ஆயிரம்
50 ஆயிரம்
75 ஆயிரம்
1 லட்சம்

விடை: 1 லட்சம் ( இந்த திட்டத்திற்கு 1200 கோடியிலிருந்த நிதி 1600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது )

8)      2000 ரூபாய் கரன்சி அச்சடிக்க செலவு எவ்வளவு ஆகிறது என கூறப்பட்டுள்ளது?
3.23 பைசா
3.33 பைசா
3.43 பைசா
3.53 பைசா

விடை: 3.53 பைசா ( இந்த மதிப்பு 2017-18 இல் 4.18 லிருந்து தற்போது 2018-19 இல் 65 பைசா குறைந்து 3.53 பைசாவாக உள்ளது.  ரூ.500 தற்போது 2.13, 2018-19 இல் 2.39,  200 தற்போது 2.15  2017-18 2.24 )

9)      தற்போது நீக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ரோட்ஸ் என்பவர் எந்த நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆவார்?
மேற்கு இந்திய தீவுகள்
பாகிஸ்தான்
வங்கதேசம்
ஆப்கானிஸ்தான்

விடை:  வங்கதேசம்  (இவருக்கு 2020 டி20 உலகக்கோப்பை வரை ஒப்பந்தம் உள்ள நிலையில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் தோல்வி காரணமாக பதவியில் இருந்து விடுவிடுவிப்பதாக அந்த நாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் )

10)  காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் பிரிவில்  எந்த பதக்கம் வென்றுள்ளார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
4வது இடம்

விடை: தங்கம் ( 49 கிலோ எடைபிரிவில் 191 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

11)  தைவானுக்கு எந்த நாடு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது?
பிரிட்டன்
அமெரிக்கா
பிரான்ஸ்
இரஷ்யா

விடை: அமெரிக்கா ( ரூ 15,000 கோடி (2.2 பில்லியன் டாலர்) மதிப்பில் 108 ‘அப்ராம்ஸ்’ ரக டாங்கிகள், 250 ‘ஸ்டிங்கர்’ ரக டாங்கிகள் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவு துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் உள்ளது. ஆனால் அமெரிக்க எம்.பிக்கள் ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  1949 இல் முடிவடைந்த உள்நாட்டு போரில் இருந்து தைவான் தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் சீனா இதனை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதியாக கூறி வருகிறது)

12)  எந்த கார் நிறுவனம் ‘கோனா’ என்ற முதல் மின்சார காரை தயாரித்துள்ளது?
மாருதி
ஹூண்டாய்
வோக்ஸ் வேகன்
டொயோட்டா

விடை: ஹூண்டாய் ( இது தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் ஆகும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம். இந்த காரில் அதிநவீன ஏர்பிரேக், கிங் சிஸ்டம்ஸ், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, பின்பக்க கேமரா உள்ளது. இதன் விலை 25.3 லட்சம். )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

13)  சென்னையின் எதர் எனர்ஜி என்ற நிறுவனம் ஏதர் 450 , ஏதர் 340 மாடல் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

14)  ஷார்ஜாவில் வசித்து வரும் இந்திய தொழிலதிபர் லாலோ சாமுவேலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முதன்முதலாக நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. இவர் கிங்ஸ்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்ஹ்டின் தலைவர் ஆவார். இதற்கான அட்டையை ஷார்ஜாவின் வெளிவிவகாரங்கள் மற்றும் குடியிருப்பு துறையின் பொது இயக்குநர்  அரீஃப் அலி சாம்சி  வழங்கினார்.   (நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.)

2 comments:

  1. Its very useful....when we read newspaper and take a quiz ....gives a confident what we read and gain thanks a lot for ur effort

    ReplyDelete
  2. thankyou. And daily news paper video also available in kal viragu youtube channel. daily morning 7 - 8 upload this video and also give in quiz in this blog. so if you try to watch our videos and to share our videos to your friends.

    ReplyDelete