Wednesday 10 July 2019

ஜூலை 11 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 11 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     தமிழக சட்டப்பேரவையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 110 விதியின் கீழ் எத்தனை மீன்பிடி புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
1
2
3
4

விடை: 3  (விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம், கழிவேலி பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது)

2)      அம்மா இளைஞர் விளையட்டு திட்டம் எத்தனை ஊராட்சியில் செயல்ல்படுத்தப்பட உள்ளது?
12,524
12,324
12,454
12,534

விடை: 12,524 ( அனைத்து ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் 528 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இதன் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதேனும் மூன்று விளையாட்டுக்கான களம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அமைத்து, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது)


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.




3)      மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம் எந்த மாவட்டத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
சென்னை
வேலூர்

விடை: காஞ்சிபுரம் ( படப்பை )

4)      பர்தோலி சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1922
1924
1926
1928

விடை: 1928 ( பிப்ரவரி 12 )  ( இதில் காந்தியின் தளபதிகள் எனப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அப்பாஸ் தயாப்ஜி ஆகியோர் காந்தியால் அனுப்பப்பட்டு போராட்டம் மேற்கொண்டனர். இந்த போராட்டத்திற்கான காரணம் பம்பாய் மாகாணத்தில் இருந்த பர்தோலியில் விவசாயிகள் மீது 22% வரி விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து நடந்த இந்த போராட்டம் 1928 ஆகஸ்ட் மாதம்  வெற்றி அடைந்தது.)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


5)      மாதாந்திர உதவித்தொகை  வீடுகளுக்கே சென்று அளிக்க எந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது?
மகாராஷ்டிரா
ஆந்திரா
தெலுங்கானா
கேரளா

விடை: ஆந்திரா ( முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை வீட்டுக்கே சென்று கொடுக்கப்படும். செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ‘கிராமசெயலகம்’ அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது) ( விவசாயிகளுக்கு 84, ஆயிரம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது)

6)      தேசிய அளவில் தண்ணீர் பற்றாக்குறையில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
ஆந்திரா
பீகார்
உத்திரப்பிரதேசம்

விடை: தமிழ்நாடு ( மொத்தம் உள்ள 4,378 இல் 756 நகரங்கள் கடுமையான வறட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகம் 184 நகரங்களுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் 112 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், உத்திரபிரதேசம் 3 வது இடத்திலும் உள்ளது)


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.




7)      மாநிலங்களுக்கு இடையேயான நிலவும் நதிநீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க எந்த ஆண்டு நதிநீர் பிரச்சனைகள் சட்டம் திருத்தப்பட உள்ளது?
1954
1956
1965
1991

விடை: 1956 ( போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது)

8)      தமிழகத்தில் எத்தனை புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன?
1
2
3
4

விடை: 3

9)      தமிழகத்தில் புதிதாக தேசிய ஊரக பொருளாதார புத்தாக்க திட்டம் எத்தனை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது?
3
5
7
9

விடை: 5 ( கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி )


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.



10)  உலகமக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?
ஜூலை 10
ஜூலை 11
ஜூலை 12
ஜூலை 13

விடை: ஜூலை 13

11)  ஜன்தன் கணக்கில் தற்போது எத்தனை கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது?
50 ஆயிரம் கோடி
75 ஆயிரம் கோடி
90 ஆயிரம் கோடி
1 லட்சம் கோடி

விடை: 1 லட்சம் கோடி (1,00,495 கோடி ) (கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் ) ( 2014  ஆகஸ்ட் 28 இல் தொடங்கப்பட்டது. தற்போது 36.06 கோடி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 28.44 கோடி பேருக்கு ரூபே ஏடிஎம் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 28, 2018 க்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு விபத்து காப்பீடு தொகை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது)

12)  உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டி எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது?
இத்தாலி
இஸ்ரேல்
இந்தோனேசியா
இலங்கை

விடை: இத்தாலி ( நபோலி நகர்) (இதில் 100 மீட்டர்  மகளிர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 11.32 விநாடிகளில் கடந்து இந்த இடத்தை பிடித்துள்ளார்.  ஸ்விட்சர்லாந்தின் டெல்போன்டே 11.33 விநாடிகளில் வெள்ளி பதக்கம் பெற்றார்) ( இந்த போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன் 2015 இல் நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தர்ஜீத் தங்கம் வென்றிருந்தார்.  அதேபோல் உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்ற  இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பினை பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் ஹிமாதாஸ் முதலிடம் பெற்றார்)


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.




No comments:

Post a Comment