Monday 8 July 2019

ஜூலை 9 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 9 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      பங்குசந்தையில் சென்செக்ஸ் ஜூலை 9 ஆம் தேதி எத்தனை புள்ளிகள் சரிந்தது?
790
792
795
798

விடை: 792  ( 2.01%  குறைந்து 38,720 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குசந்தை நிப்டி 252 புள்ளிகள் குறைந்து (2.14% ) 11,558 புள்ளிகளாக இருந்தது.)     ( 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். ஜூலை 5 இல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 முக்கிய காரணங்களுக்காக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது )  ( நிறுவனங்களில் பொதுமக்கள் பங்களிப்பு 25% லிருந்து 35% ஆக அதிகரித்தது, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கான வரியை உயர்த்தியது, பங்குகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளுக்கு கட்டணம் விதிப்பது ஆகிய மூன்றும் முக்கிய காரணங்களாகும் )

2)      அட்மா ( தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப முகமை) திட்டம் என்பது என்ன?
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அதிக விலை கொடுக்கும் திட்டம்
விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்
விவசாயிகளை விவசாய சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம்
விவசாயிகளி வருமானாத்தை உயர்த்தும் திட்டம்

விடை: விவசாயிகளுக்கு விவசாய சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம்   (இதன் படி ஒவ்வொரு ஊராட்சியிலும் சோலார், நுண்ணீர் பாசனம் போன்ற நவீன முறைகளை கையாலும் 10 பேரை சுற்றுலா அழைத்து செல்வர். இதன்படி திருவள்ளூர் மாவட்ட விவசாயியகளை கோவை கொடிசியா அரங்கத்தில் ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறும் வேளாண்மை நவீன கண்காட்சியில் பங்குபெற இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர் )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      உலக இளைஞர்கள் திறன் நாள் ?
ஜூலை 10
ஜூலை 15
ஜூலை 17
ஜூலை 20

விடை: ஜூலை 15 ( இந்த ஆண்டு இந்த விழாவையொட்டி, ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணர்வு திறன் வாரமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்துள்ளது )

4)      இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை 1 லட்சம் பேருக்கு எத்தனை பேர் இருக்க வேண்டும்?
135
150
165
180

விடை: 180  ( ஆனால் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை 135 பேர். ஐ.நாவின் பரிந்துரைப்படி 222 பேர் இருக்க வேண்டும்)

5)      2017 இல் மத்திய அரசு காவல்துறை நவீனமயமாதலுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கியது?
10000 கோடி
15000 கோடி
20000 கோடி
25000 கோடி

விடை: 25000 கோடி ( இந்த திட்டத்தின் படி ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸல் பாதிப்பு மாவட்டங்களுக்கு 10,000 கோடி தரப்பட்டது. மற்ற மாநில காவல்துறை மேம்பாட்டிற்கு 15,000 கோடி தரப்பட்டது. இதில் மாநில அரசின் சதவீதம் 25%, மத்திய அரசின் சதவீதம் 75% ஆகும் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காஷ்மீரில் 2018-19 ஆம் ஆண்டு அதிக அளவு உயிரிழப்பு நடந்துள்ளதை கூறியுள்ள அமைப்பு எது?
ஐ.நா சபை
ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்
ஐரோப்பிய யூனியன்
ஐ.நா நீதிமன்றம்

விடை: ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ( இதனை எதிர்த்து பாகிஸ்தான் அதிக பயங்கராவதத்தை ஊக்குவிப்பதை மனித உரிமை ஆணையத்திடம் தெரிவிப்போம் என இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார் ) கல்விரகு நடப்பு நிகழ்வுகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

7)      அஜப் பூஷன் பாண்டே எந்த துறை செயலர் ஆவா?
வருவாய்த் துறை செயலர்
தொழில்துறை செயலர்
போக்குவரத்து துறை செயலர்
சுகாதாரத்துறை செயலர்

விடை: வருவாய்த்துறை செயலர் ( இவர் தற்போது விதிக்கப்பட்டுள்ள தங்கத்தின் மீதான் வரியானது 10% லிருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அத்தியாவசியமற்ற இறக்குமதியை தவிர்க்கும் என கூறியுள்ளார்)

8)      சுலோவோக்கியாவில் உலக உடல் ஊனமுற்றோருக்கான என்ன போட்டி  நடந்தது?
தடகள போட்டி
சதுரங்க போட்டி
நீச்சல் போட்டி
துப்பாக்கி சுடுதல் போட்டி

விடை: சதுரங்க போட்டி  ( இதில் கே.ஜெனித்தா ஆண்டோ 2 முறை தங்கம் வென்றுள்ளார்) ( இது வரை உலக ஊனமுற்றோர் போட்டியில் 6 முறை தங்கம் வென்றுள்ளார்) ( திருச்சி விமான நிலையத்தில் இவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது )

9)      குட்னோ சர்வதேச தடகள போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
இங்கிலாந்து
கத்தார்
போலாந்து
இந்தோனேஷியா

விடை: போலாந்து ( இதில் மகளிர் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் ஹீமாதாஸ் 23.97 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். கடந்த வாரம் நடைபெற்ற போன்ஸான் தடகள கிராண்ட்ப்ரீ போட்டியிலும் 23.65 வினாடிகளில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

10)  கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றது?
அமெரிக்கா
பிரேசில்
பெரு
அர்ஜென்டினா

விடை: பிரேசில் ( 3-1 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது. பிரேசிலின் ரியோடிஜெனிரோ நகரில் இந்த போட்டி நடைபெற்றது. அர்ஜென்டினா 3 வது இடமும், நடப்பு சாம்பியனாக இருந்த சிலி 4 வது இடமும் பெற்றது )

11)  எந்த நாட்டில் சாலையில் திரைப்படத்தை திரையிடும் விழா நடந்தது?
ஜெர்மனி
இரஷ்யா
பிரான்ஸ்
பிரேசில்

விடை: பிரான்ஸ்  ( தலைநகர் பாரிசில் உள்ள ஹாம்ப் எலிஸி என்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தி திறந்த வெளியில் திரைப்படம் திரையிடும் விழா 2012 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது)

12)  ஸ்டெரிலிங்-வில்ஸன் சோலார் நிறுவனத்தில் புதிய பங்குகளை வெளியிடும் திட்டத்துக்கு செபி எவ்வளவு கோடிக்கு  அனுமதி வழங்கியுள்ளது?
4000
4500
5000
5500

விடை: 4500 கோடி  ( இதன் தலைவர்கள் யாகாதி தருவாலா மற்றும் சபூர்ஜி பலோன்ஜி )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

13)  11 ஆண்டுகளுக்கு முன்பு 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதினர். அதே போல் உலகக்கோப்பை போட்டியில் ஜூலை 9 ஆம் தேதி 2019 மோத உள்ளனர். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

14)  சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ் ( Stanadard and Poors (S&P) ) நிறுவனம் தற்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கான  70,000 கோடி மூலதனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment