Tuesday 2 July 2019

ஜூலை 3 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 3 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தமிழ்நாட்டின் மாநில பழம் எது?
மா
பலா
வாழை
நவாப்பழம்

விடை: பலா ( தற்போது அறிவிக்கப்பட்டுள் தமிழ்நாட்டின் வண்ணத்துப்பூச்சியான தமிழ் மறவன் அதிவேகத்தில் செல்லக்கூடியது. இதை ஆங்கிலத்தில் Tamil Yeoman என அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர்  Cirrochora thais ஆகும். மஹாராஷ்டிராவில் புளூ மோர்மன், உத்தரகாண்டில் காமன் பீகாக், கர்நாடகாவில் சதர்ன் பேர்டுவிங்க், கேரளாவில் மலபார் பாண்டடு பீகாக் ஆகியவை மாநில வண்ணத்துப்பூச்சியாக உள்ளது.) 

2)      டாக்கோமீட்டர் எதற்கு பயன்படுகிறது?
மின் ஆற்றலை அளக்க
ஓடும் வாகனத்தின் வேகத்தை அளக்க
நிலநடுக்கத்தை அளக்க
ஒளியின் பிரகாசத்தை அளவிட

விடை: ஓடும் வாகனத்தின் வேகத்தை அளக்க  ( மின் ஆற்றலை அளக்க அம்மீட்டர் பயன்படுகிறது. சீஸ்மோமீட்டர் நிலநடுக்கத்தின் சக்தியை ரிக்டர் அளவில் அளக்கப் பயன்படும் கருவி. ஃபோட்டோமீட்டர் ஒளியின் பிரகாசத்தை அளவிட பயன்படும் கருவி)

3)      ஆந்த்ரேஸ் மானுவெல் லோபஸ் ஆப்ரடார் என்பவர் எந்த நாட்டின் அதிபர் ஆவார்?
ஆஸ்திரியா
பெர்முடா
மெக்ஸிகோ
ஜெர்மனி

விடை: மெக்ஸிகோ

4)      அமெரிக்காவின் அப்போலோ திட்டத்தின் படி நிலவில் மனிதர்களை அனுப்பி தற்போது எத்தனை ஆண்டுகள் நிறைவடைய உள்ளது?
35
40
45
50

விடை: 50 ( ஜூலை 20. 1969 நீல் ஆம்ஸ்ட்ராங் , பஸ் ஆல்ட்ரின் தரையிரங்கினர் ) ( பொன்விழா ஆண்டு ) ( இந்த விதமாக நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறைகளின் மாதிரிகளை  ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை எந்த நாடு பெற்றுள்ளது?
இந்தியா
இஸ்ரேல்
இங்கிலாந்து
இத்தாலி

விடை: இந்தியா  ( அமெரிக்க செனட் சபை இதற்கான ஒப்புதலை தெரிவித்துள்ளது.இதன் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஆயுத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தளர்த்தப்படும். அது மட்டும் இல்லாமல் நேட்டோ நாடுகளுக்கு கிடைக்கும் பாதுகாப்பு இந்தியாவுக்கும் கிடைக்கும். (நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான வாட்சாப் குழுவில் பகிரவும்) இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.
2017 இல் இந்தியாவை பாதுகாப்பு ரீதியில் முதன்மைக் கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தேசிய பதுகாப்பு அங்கீகார சட்டத்தின்  கீழ் விதி சேர்க்கப்பட்டது)

6)      இ-பீட் செல்லிடப்பேசி செயலி எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
இணையதள வேகத்தை அதிகரிக்க
மருத்துவ துறை சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்க்க
ரயில்வே பாதுகாப்பு  படை வீரர்களை கண்காணிக்க
தொழில் துறை வளர்ச்சியை பெருக்க

விடை:  ரயில்வே பாதுகாப்பு  படை வீரர்களை கண்காணிக்க ( முதல்கட்டமாக எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சேரன், நீலகிர், திருவனந்தபுரம் மற்றூம் பாலக்காடு விரைவு ரயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது)

7)      சொல் உண்டியல் திட்டம் என்பது என்ன?
தமிழ் சொற்களை கண்டுபிடிக்கும் முயற்சி
பிறமொழிச்சொற்களை தமிழில் மாற்றும் திட்டம்
சொற்கள் உருவாக்கத்தை இளைஞர்களிடம் இயக்கமாக் எடுத்துச் செல்வது
பிற துறை சொற்களை சேகரித்து மாற்றும் திட்டம்

விடை: சொற்கள் உருவாக்கத்தை இளைஞர்களிடம் இயக்கமாக் எடுத்துச் செல்வது   ( தற்போது உருவாக்கப்பட்டுள்ள சொற்குவை திட்டம் பிரிட்டானியா தேசிய தரவகத்தின் வடிவத்தைப் போல உருவாக்கப்பட்டுள்ளது.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      நவம்பர் மாதம் எத்தனையாவது உலக பொறியியல்ல் கல்வி மன்ற மாநாடு நடைபெற உள்ளது?
5
7
9
11

விடை: 9 ( சென்னையில் ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது) ( www.weef2019.org)

9)      122 நாடுகளின் தண்ணீர் பற்றாக்குறை தரவரிசைப் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
100
105
110
120

விடை: 120

10)  உலகக்கோப்பை போட்டியில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 2 வதுஇந்தியர் என்ற சாதனையை யார் படைத்துள்ளார்?
விராட் கோலி
ரோகித் சர்மா
ராகுல்
தோனி

விடை: ரோகித் சர்மா ( முதல் இந்தியர் சச்சின்)

11)  விம்பிள்டன் போட்டியில் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற கோரி கவுப்க்கு எத்தனை வயது?
15
16
17
19

விடை: 15 ( இவர் வீனஸ் வில்லியம்ஸை முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார் )

12)  அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மேஜர் பேஸ்பால் லீக் அமைப்பு தனது 6வது சர்வதேச அலுவலத்தை எந்த இடத்தில் தொடங்க உள்ளது?
மும்பை
டெல்லி
சென்னை
பெங்களூர்

விடை: டெல்லி


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.



13)  முகநூல் நிறுவனத்தின் அலுவலகம் கலிஃபோர்னியா மாகாணம் மென்லோ நகரில் உள்ளது. இங்கு உள்ள தலைமையக வளாகத்தில் தபால்கள் வைக்கப்படும் அலுவலகத்தில் பார்சல் கண்டெடுக்கப்பட்டது. அதில் செரீன் என்ற நச்சுப்பொருள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு உள்ளது.

14)  வேளான் ஏற்றுமதியை ஊக்குவிக்க சிஎஸ்இபிஎஃப் எனும் கூட்டுறவு துறை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இயங்கும். இந்தியாவி 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டு உள்ளன.  கூட்டுறவு மூலமாக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு முதல் சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சியை டெல்லியில் பிரகதி மைதானத்தில் அக்டோபர் 11 முதல் 13 வரை நடத்த உள்ளது.

15)  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎச்இஎல் இன் தலைவர் நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார். ( பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்)

16)  மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராகவும் செயல்படுவார்.   இதற்கு முந்தைய தலைவரான மசூத் உசைன் ஓய்வு பெற்றதை அடுத்து  மத்திய நீர்வளதுறை செயலர் சஞ்சய் சிங் சவுஹான் வெளியிட்ட ஆணையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

       நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.









No comments:

Post a Comment