Wednesday 3 July 2019

ஜூலை 4 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 4 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் யார்?
அரவிந்த பனகாரியா
அரவிந்த் சுப்பிரமணியன்
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
அமிதாப் காந்த்

விடை: கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்  ( 2018 ஜூனில் இல் அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகிய பிறகு, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் டிசம்பர் 2018 இல் பதவியேற்றார்)

2)     பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது யார்?
நிதி அமைச்சர்
நிதித்துறை செயலாளர்
நிதித்துறை இணையமைச்சர்
தலைமை பொருளாதார துறை தலைமை ஆலோசகர்

விடை: தலைமை பொருளாதார துறை ஆலோசகர் ( நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது)

3)     இந்தியா ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர பதவிக்கு எத்தனை நாடுகள் ஆதரவு வேண்டும்?
55
97
129
193

விடை: 129 ( ஆசியாவை சேர்ந்த 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதில் பாகிஸ்தானும் , சீனாவும் இருப்பது குறிப்பிடதக்கது)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      2021-22 ஐநா தற்காலிக உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் உரிமையை இந்தியாவுக்கு எந்த நாடு விட்டுக்கொடுத்துள்ளது?
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
வங்கதேசம்
இலங்கை

விடை: ஆப்கானிஸ்தான்

5)      இந்தியா எத்தனை முறை ஐ.நா தற்காலிக உறுப்பின பதவியை வகித்துள்ளது?
3
5
7
9

விடை: 7 ( 1950-51 முதல் முறை,  2010-11 இல் ஏழாம் முறை )

6)      2030 ஆண்டில் எந்த நாட்டில் அதிக இளைஞர்கள் இருப்பர்?
இந்தியா
சீனா
அமெரிக்கா
இரஷ்யா

விடை: இந்தியா ( உலக இளைஞர்களில் 4 இல் ஒருவராக் இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது )

7)      பாகிஸ்தான் வான் பகுதியில் இந்தியா செல்லும் எத்தனை பாதைகளை மூடியுள்ளது?
4
7
9
11

விடை: 9  ( மொத்தம் 11 பகுதிகள். அதில் 2  பகுதிகள் மட்டுமே திறந்து விடப்ட்டுள்ளன. இதனால் ஏர் இந்தியா ஜூலை மாதம் 2 ஆம் தேதி வரை  491 கோடி நஷ்டத்தையும், ஸ்பைஸ்ஜெட் 30.73 கோடியும்,  இன்டிகோவுக்கு 25.1 கோடியும், கோ ஏர் நிறுவனத்துக்கு 2.1 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கல் விரகு சேனல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும். இதனை நாடாளுமன்றத்தில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளார்)

8)      எந்த பொதுத்துறை நிறுவனம் கடந்த ஆண்டு 14 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது?
பிஹெச்இஎல்
பிஎஸ்என்எல்
பவர்கிரிட்
அஞ்சலகம்

விடை: பிஎஸ்என்எல் ( பிஎஸ்என்எல் ஊழியர்களின் சம்பளம் மட்டும் ஆண்டுக்கு 14,488 கோடி. இது மொத்த வருவாயில் 75% ஆகும் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை தற்போது எந்த மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது?
மகாராஷ்டிரா
மத்தியபிரதேசம்
கர்நாடகா
பஞ்சாப்

விடை: மத்தியப்பிரதேசம்

10)  அமெரிக்க ஜனாநாயக கட்சியில் இருந்து போட்டியிட மொத்தம் எத்தனைபேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்?
10
15
20
25

விடை: 20 ( இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2 வது இடத்தில் உள்ளார்)

11)  நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளைக் கைவிடும் ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1981
1983
1985
1987

விடை: 1987 ( அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் ரஷ்யா அதிபர் மிகயூல் கோர்பசேவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமின் புடின் பதிலடியாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான மசோதாவில் தற்போது கையெழுத்திட்டுள்ளார்)

12)  வனப்பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தி தற்போது எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன?
30
50
70
90

விடை: 70

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment