Sunday 7 July 2019

ஜூலை 8 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 8 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தற்போது எந்த நாட்டின் பள்ளிகளில் திருக்குறளை பாடமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
இந்தோனேசியா
கம்போடியா
மலேசியா
சிங்கப்பூர்

விடை: கம்போடியா ( இதனை  கம்போடியா அரசு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கேமர பேரரசுக்கு (கம்போடியா நாட்டின் பழைய பெயர்) ஆதரவாக இருந்த ராஜேந்திர
சோழனுக்கு கம்போடியாவில் சிலை வைத்து கொண்டாடப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய 210 அடி சிவலிங்கம்  புனரமைக்கப்பட உள்ளது. கேமர் அரசை 6 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மகேந்திர வர்மன் தான் காஞ்சிபுரத்தையும் ஆட்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.)     நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

2)      மாண்டரின் ஆரஞ்சு பழத்திற்கு எந்த ஆண்டு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டது?
2016
2017
2018
2019

விடை: 2018  ( மேகாலயத்தில் விளைவதாகும். அதிக வறட்சியிலும் விளையும் தன்மையுடையதாகும்)

3)      மத்திய அரசுக்கு பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் ஈவுத்தொகை மற்றும் கூடுதலாக வழங்க உள்ள ஈவுத்தொகை எவ்வளவு ஆகும்?
56 ஆயிரம் கோடி
96 ஆயிரம் கோடி
1.06 லட்சம் கோடி
1.26 லட்சம் கோடி

விடை: 1.06 லட்சம் கோடி ( இந்த ஈவுத்தொகையை மத்திய அரசிடம் வழங்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அண்மையில் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது)

4)      தற்போது இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட உள்ள புதிய விமான நிலையமான பலாலி எந்த நாட்டில் உள்ளது?
நேபாளம்
வங்கதேசம்
ஆப்கானிஸ்தான்
இலங்கை

விடை: இலங்கை ( யாழ்பாணத்தில் உள்ளது.  1940 இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி வந்த இந்த விமான தளம் தற்போது 1983 இலங்கை உள்நாட்டு போரால் நிறுத்தப்ப்ட்டன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த  6000  ஏக்கர் பகுதியில் தற்போது 1500 ஏக்கர் விடுவித்துள்ளதால் இந்திய அரசின் 350 கோடி நிதி உதவி மூலம் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது)

5)      காவல்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் உள்ள மாநிலத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்
பிகார்
மேற்குவங்கம்
தெலுங்கானா

விடை: உத்திரப்பிரதேசம்  ( 1,28,952 ) ( 2வது பீகார், 3 வது மேற்கு வங்கம் )

6)      சுதர்சன் என்ற இராணுவஒத்திகை இராணுவ எல்லையில் மொத்தம் எத்தனை கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது?
500 கி.மீ
1000 கி.மீ
1500 கி.மீ
2000 கி.மீ

விடை: 1000 கி.மீ ( இது பங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், போதை மருந்து கடத்தலை தடுக்கவும் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறுகிறது) (ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் 485 கி.மீ, பஞ்சாபில் 553 கி.மீ ) ( இதன் அறிக்கையை பிஎஸ்எஃப் இயக்குநர் ரஜ்னிகாந்த் மிஸ்ரா உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க உள்ளார் )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

7)      1 கோடிக்கும் மேல் பணபரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் மூலவரி (டிடிஎஸ்) 2% எந்த புதிய பிரிவின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது?
190
192
194
196

விடை: 194 ( இந்த சட்டதிருத்தம் செப்டம்பர் 1, 2019 முதல் கொண்டுவரப்பட உள்ளது ) ( அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டம் 139 ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்டம் 2020 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள் 2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்வோர், மின்கட்டணம் 1லட்சம் செலுத்துவோர், 1 கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்வோர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

8)      மகளிர் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ள அணி எது?
நெதர்லாந்து
அமெரிக்கா
சிலி
பெரு

விடை: அமெரிக்கா ( பிரான்சில் லியான் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி 4 வது முறையாக பட்டம் வென்றது)

9)      ரோஜர் பெடரர் தற்போது எத்தனையாவது வெற்றி பெற்றுள்ளார்?
200
250
300
350

விடை: 350 ( பிரான்ஸின் லூகாஸ் பௌலியை வென்றதன் மூலம் இந்த சாதனை படைத்துள்ளார்.  17 வது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


10)  ரோஹித் சர்மா தற்போது சர்வதேச தரவரிசையில் எத்தனையாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்?
1
2
3
4

விடை: 2 ( விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார் )

11)  10 வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர் நூல்கள் என்ற நூலில் எத்தனை தமிழ்பெயர்கள் இடம் பெற்றுள்ளன?
42000
44000
46000
48000

விடை: 46000 ( விஐடி வேந்தர் மற்றும் தமிழியக்க தலைவர் விசுவநாதன் முயற்சியில் இந்த நூல் உருவாகி உள்ளது) (தற்போது உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின் 10 ஆவது ஆண்டு விழாவுடன் சேர்த்து, அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் 32 வது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று வருகிறது)

12)  சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி ரெஜிஸ்டார் என்ற தொழில்நுட்பம் எதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது?
5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்த
செயலிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க
திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க
இணையதள வசதியை அதிகரிக்க

விடை: திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க  ( மத்திய அரசின் சென்டர் பார் டெவலப்மென்ட ஆப் டெலிமேட்டிக்ஸ் என்ற துறை உருவாக்கியுள்ளது )


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


13)  சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் அஞ்சு சார்ஜ் ( கேரள மாநிலம்). பாரிசில்  2003 இல் நடந்த உலக சாம்பியன்சிப் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்காக அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.)

14)  தற்போது வரை 4 முறை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. 1952, 1963, 1972, 2002 .  1952 இல் மட்டும் இதற்கான குழு அமைக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் குடியரசு தலைவர் அலுவலகமே இந்த பணியை மேற்கொண்டது. இதற்காக அமைக்கப்படும் குழு தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைவரே இருப்பார். இந்த குழுவில் தலைமைத்தேர்தல் ஆணையர், மாநில தேர்தல் ஆணையர்கள் அங்கம் வகிப்பர். இதன் முடிவில் நிதிமன்றம் கூட தலையிட முடியாது.  2001 அரசமைப்பு 84 வது திருத்தத்தின் படி 2026 க்கு பின் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை (2032 இல் ) செய்ய வேண்டும். ( ஆனால் 2002 இல் மட்டும் தொகுதியின் எல்லையை மட்டும் மறுவரையறை குழு மாற்றி அமைத்தது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.



No comments:

Post a Comment