Sunday 30 June 2019

ஜூலை 1 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 1 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      அமெரிக்காவுடன் தலிபான் எத்தனையாவது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது?
1
3
5
7

விடை: 7  ( அமெரிக்க தூதர் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே 7 வது கட்ட பேச்சு வார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கியுள்ளது)

2)      ஜி.எஸ்.டி சட்டம் கொண்டு வந்து தற்போது எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
1
2
3
4

விடை: 2 ( 2 வது ஆண்டு நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற உள்ளது)

3)      எத்தனையாவது தலைமைச் செயலாளராக க.சண்முகம் தற்போது பதவியேற்றுள்ளார்?
40
42
46
49

விடை: 46

4)      டி.சி.எஸ் நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1962
1968
1972
1978

விடை: 1968 ( எஃப்சி கோலி என்பவரால் தொடங்கப்பட்டது. இந்திய மென்பொருள் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆவார். டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டிசிஎஸூக்கு 45 நாடுகளில் 149 இடங்களில் கிளைகள் உள்ளன. பணியாளர்கள் எண்ணிக்கை 4,24,285. வருவாய் 2,090 கோடி. சொத்து மதிப்பு 1,690 கோடி. பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்கள்ல் பட்டியலில் டிசிஎஸ் க்கு 10 ஆவது இடம் பிடித்துள்ளது. 2019 இல் 10 ஆயிரம் கோடி டாலரை தாண்டிய முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற சாதனை படைத்துள்ளது) ( டிசிஎஸ் சந்தை மதிப்பு 8,37,194.55 கோடியாக உயர்ந்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸைக் காட்டிலும் அதிகம் வந்து முதல் இடம் பெற்றது )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      ஜூலை- செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்ட வட்டியை மத்திய அரசு எவ்வளவு சதவீதம் குறைத்துள்ளது?
0.1
1.0
0.5
1.5

விடை:0.1%   ( சிறு சேமிப்புதிட்டம் என்பது பிபிஎஃப் திட்டம், கிஸான் விகாஸ் பத்திரம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி திட்டம், 1-3 ஆண்டு டெபாசிட், 5 ஆண்டு டெபாசிட், தொடர் வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான திட்டம், சேமிப்பு கணக்கு ஆகியவை ஆகும். இதில் சேமிப்பு கணக்கிற்கு மட்டும் 0.1% குறைக்கவில்லை)

6)      ஸ்டக்ஸ்நெட் வைரஸ் என்பது எந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தியது?
வடகொரியா
சீனா
ஈரான்
இரஷ்யா

விடை: ஈரான்  ( ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க அமெரிக்க பயன்படுத்தியது. மத்திய கிழக்கு நாடுகளை உளவுபார்ர்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தயாரித்து பரவவிட்ட வைரஸ் ‘ஃபிளேம் வைரஸ்’.
சில ஆண்டுகளுகு முன்பு சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து தாக்கப்பட்டது ‘ஷமூன் வைரஸ்’.

7)      ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
12
43
74
87

விடை: 74 ( கடந்த ஆண்டு 73 வது இடம். இந்தியா வைத்துள்ள பணத்தின் சதவீதம் 0.07% ஆகும்.  முதல் இடம் பிரிட்டன் (26%). அமெரிக்கா-2, மேற்கிந்திய தீவுகள் 3, பிரான்ஸ் 4, ஹாங்காங் 5, ( முதல் 5 நாடுகள் 50% பங்களிப்பும், முதல் 10 நாடுகள் 75% பங்களிப்பும் கொண்டுள்ளது.  ரஷியா 20, சீனா 22,  பாகிஸ்தான் 82, வங்கதேசம் 89, நேபாளம் 109, இலங்கை 141, மியான்மர் 187, பூடான் 193. இந்திய வாடிக்கையாளர்கள் தொகை 6 சதவீதம் குறைந்து 6,757 கோடியாக உள்ளது. கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.  தற்போதைய ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் மொத்த மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
8)      பான்மூன் ஜோம் எல்லை கிராமம் என்பது எந்த நாட்டில் உள்ளது?
தென்கொரியா
வடகொரியா
ஜப்பான்
வியட்நாம்

விடை: தென்கொரியா ( எல்லைப் பகுதி. அமெரிக்க அதிபர் டிரம்ப்  தென்கொரியா-வடகொரியா எல்லைப் பகுதியான இந்த கிராமத்திற்கு சென்று எல்லை கோட்டை தாண்டி வடகொரியா சென்றார். அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்)

9)      கடலோர காவல்படை இயக்குநராக யார் பதிவியேற்றுள்ளார்?
ராஜேந்திர சிங்
கே.நடராஜன்
சுனில் லம்பா
கரம்வீர் சிங்

விடை: கே.நடராஜன் ( இவர் பாகிஸ்தான் கடல் எல்லையொட்டிய குஜராத் கடற்பகுதி முதல் கேரளா கடற்பகுதிய வரை உள்ள மேற்குபகுதி கடலோர காவல் படை கமாண்டராக இருந்தார். 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பை பலப்படுத்த  கூடுதலாக 20 நிலையங்கள், 2 பிராந்திய கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்)

10)  தமிழ்நாடு வண்ணத்துப்பூச்சி பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
சென்னை
திருச்சி
சேலம்
மதுரை

விடை: திருச்சி ( தற்போது ‘தமிழ் மறவன்’ என்ற வண்ணத்துப்பூச்சி தமிழ்நாடு மாநில வண்ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் சிர்ரோ சாரா தாய்ஸ் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இவை மரவொட்டி தாவரத்தில் முட்டையிட்டு வளரும்.)

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 5 வது இடம் பிடித்துள்ளது.

ஜூன் 30 சர்வதேச சமூக வலைதள நாள்  மற்றும் சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள்

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

Saturday 29 June 2019

ஜூன் 30 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 30 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தற்போது தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்கவுள்ள கே.சண்முகம் இதற்கு முன் எந்த துறை செயலராக இருந்தார்?
உள்துறை செயலர்
தொழில்துறை செயலர்
நிதித்துறைச் செயலர்
சுகாதாரத்துறைச் செயலர்

விடை: நிதித்துறைச் செயலர் ( 2010 -2019) ( 46 வது தலைமைச் செயலாளர் ஆவார்.  முதல் தலைமைச் செயலாளர் எஸ்.வி.ராமமூர்த்தி 1940 நவம்பர் 27 இல் இருந்தார்.  விடுதலை இந்தியாவின் முதல் செயலாளர்  ராமுன்னி மேனன். 1969இல் இந்திய சிவில் சர்விஸ் ( ஐசிஎஸ் ) ஆனது ஐஏஎஸ் ஆக மாற்றப்பட்ட பின் தலைமைச் செயலாளர் இ.பி.ராயப்பா ஆவார்.  வி. கார்த்திகேயன், டி.வ்.அந்தோணி  ஆகியோர் இருமுறை தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர். தலைமைச் செயலாளர் ஓய்வு பெறும் வயது 60. தற்போதைய தலைமை செயலாளர் அடுத்த ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார்)

2)      தற்போது புழக்கத்தில் இல்லாத நாணயம் எது?
25 பைசா
50 பைசா
1 ரூபாய்
25 பைசா மற்றும் 50 பைசா

விடை: 50 பைசா ( அரசு வெளியிட்ட நாணயங்களை வாங்க மறுப்பது விதிமீறலாகும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது)

3)      போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 1000ரூபாய் அபராதம் விதித்துள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
தெலுங்கானா
கர்நாடகா

விடை: கர்நாடகா  ( மீண்டும் செய்தால் 200 ரூபாய் அபராதம் )
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      இந்திய அணி எந்த அணியுடன் ஆரஞ்சு மற்றும் நீலம் கலந்த சீருடையில் விளையாடுகிறது?
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
வெஸ்ட் இண்டிஸ்
மேற்கு இந்திய தீவுகள்

விடை: இங்கிலாந்து ( அந்த அணியும் நீல நிற உடையில் இருப்பதால் வேறுபடுத்திகாட்ட ஆடுகிறது. இந்த ஆடாம் எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 30 இல் நடைபெறுகிறது)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      இந்திய உணவு உற்பத்தி நிறுவனத்தின் தலைமையகம் எந்த இடத்தில் உள்ளது?
டெல்லி
மும்பை
இராஜஸ்தான்
சென்னை

விடை: இராஜஸ்தான் ( ஜெய்ப்பூர் ) ( இதன் தலைவர் சிவசங்கர் குப்தா. இவர் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களின் உப்பில் அபாயகரமான சயனைடு கலந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்) ( இந்தியாவுன் முன்னனி நிறுவனங்களிடம் இருந்து ஆய்வுக்கு எடுக்கப்பட்ட மாதிரியை அமெரிக்க யூட்டா மாகாணம் சால்ட் லேக் சிட்டியில் உள்ள ‘அமெரிக்கன் வெஸ்ட் அனலிட்டிக்கல் லேபரேட்டரீஸ்’ ஆய்வகத்துக்கு அனுப்பியதில் அபாய்கரமான பொட்டாசியம் பெர்ரோசயனைடு கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது) (இதனை மறுத்துள்ள சில நிறுவனங்கள் ஒரு கிலோ உப்பில் 14 கிராம் பெர்ரோசய்னைடு  பயன்படுத்தலாம் என இந்திய உணவு  பாதுகாப்பு தர நிர்ணய் ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது)

6)      இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் 3.5 கோடி டாலர் வர்த்தகம் மேற்கொள்ள எந்த ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது?
2020
2021
2023
2025

விடை: 2025 ( ஜப்பானின் ஒசாகா நகரில் ஜொ20 நாடுகளின் 14 வது உச்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா பிரதமரும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோஉவ்டன் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது)  ( இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல் சொனாரோவையும், துருக்கி அதிபர் எர்டோகன், சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், சிலி நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்)
கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.

7)      ‘எட்ஜ் பாஸ்ட் ‘ தொழில்நுட்பம் என்பது எதற்கு பயன்படுகிறது?
போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க
பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காண
இணையதளங்களின் வேகங்களை அதிகரிக்க உதவி செய்ய
            மருத்துவதுறையில் விரைவுல் குணமடைய

விடை: பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காண ( இது சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது)

8)      ரக்சிதா என்ற திருநங்கை எந்த துறையில் முதல் பட்டம் பெற்றுள்ளார்?
மேலாண்மையியல்
வரலாறு
செவிலியர்
பொருளாதாரம்

விடை: செவிலியர் ( பத்மஸ்ரீ செவிலியர் கல்லூரியில் 4 ஆண்டு படிப்பை நிறைவு செய்தார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர்.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவருக்கு பட்டம் வழங்கப்பட்டது)
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      தற்போது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ள ஜேகே திரிபாதி எந்த நாட்டின் சர்வதேச பதக்கம் பெற்றுள்ளார்?
அமெரிக்கா
பிரிட்டன்
ஸ்காட்லாந்து
பிரான்ஸ்

விடை: ஸ்காட்லாந்து ( 2001 )  ( மேலும் இவர் 108 நாடுகள் பங்கேற்புடன் நடந்த சர்வதேச காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் விருது பெற்றவர். இவர் தமிழக காவல் துறையில் ரோந்து பணிக்காக ‘பீட் ஆபிஸர்’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தி புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்) கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

10)  தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமையகம் எங்கு உள்ளது?
டெல்லி
மும்பை
பெங்களூரு
சென்னை

விடை: பெங்களூரு (ராகுல் டிராவிட் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 19 வயது இந்திய பயிற்சியாளருமாக இருக்கிறார்)

லண்டன் நேச்சர்வேலி சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிரி இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஜெர்மனியின் கெர்பரை வென்றுள்ளார்)

அமெரிக்காவின் எஃப்22 என்ற ரேடார் கண்களுக்கு புலப்படாத விமானங்களை கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

Friday 28 June 2019

ஜூன் 29 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 29 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      விஜய் கோகலே என்பவர் எந்த துறை செயலர் ஆவார்?
உள்துறை
உணவு வழங்கல் துறை
வெளியுறவுத்துறை
பாதுகாப்பு துறை

விடை: வெளியுறவுத்துறை

2)      இந்தியா எந்த நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவுடம் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது?
வெனிசுலா
ரஷ்யா
ஈரான்
சீனா

விடை: ஈரான் ( ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை ஏற்று அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குதல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஜப்பானில் ஜொன் 28 இல் நடைபெற்ற ஒசாகா மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.)
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      உணவுப் பொருள்களின் மானியம் தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது?
1.15 லட்சம் கோடி
1.25 லட்சம் கோடி
1.35 லட்சம் கோடி
1.45 லட்சம் கோடி

விடை: 1.45 லட்சம் கோடி  ( மத்திய அமைச்சர் இந்தியா முழுவதும் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது )

4)      போக்குவரத்து காவலர்களுக்கு விதிமீறலில் ஈடுபடுவோரை  மின்னணு முறையில் அபராதம் விதிக்கும் கருவி எந்த வங்கியிடம் இருந்து வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட உள்ளது?
இந்தியன் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கை
பேங்க் ஆஃப் இந்தியா

விடை; ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா ( இந்த கருவி முதல் முறையாக் 750 கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை வாகன் மற்றும் சாரதி ஆகிய மென்பொருள்களுடன் இணைப்பதன் மூலம் எளிதாக முந்தைய பணப்பரிவர்த்தனை, அபராதம், குற்றச்செயல்கள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்டறிய இயலும்) ( உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி ஆவார் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      எந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது?
மிசோரம்
நாகலாந்து
ஜம்மு காஷ்மீர்
ஹரியானா

விடை: ஜம்மு காஷ்மீர் ( இதற்கான ஒப்புதல் மக்களவையில் வழங்கப்பட்டது. (கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்) ஜூலை 3 ஆம் தேதியுடன் காலக்கெடு முடவடைய இருந்த நிலையில் , ரமலான் நோன்பு மற்றும் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரை நடைபெறுவதால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணைய கருத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது)

6)      ஜப்பானி ஒசாகா ஜி20 மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு எத்தனை அம்ச அணுகுமுறையை முன் வைத்துள்ளது?
1
3
5
7

விடை: 5  (பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பாரபட்சமற்ற  முடிவுகள், கச்சா எண்ணெய் விலை குறைக்க நடவடிக்கை,  பிரிக்ஸ் வங்கி மூலம் நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல், பேரிடர் மீட்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு )

7)      நாகராஜ் நாயுடு என்பவர் யார்?
ஐ.நாவுக்கான இந்திய தூதர்
ஐ.நாவுக்கான இந்திய துணைத்தூதர்
உலகவங்கிக்கான இந்திய  உறுப்பினர்
யுனெஸ்காவுக்கான இந்திய உறுப்பினர்

விடை: ஐ.நாவுக்கான இந்திய துணைத்தூதர் ( ‘யூத எதிர்ப்பு, இனவெறி, வெறுப்புணர்வ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற  ஐ.நா கூட்டத்தில் இவர் கலந்து கொண்டு யூதர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் நிலைப்பாடு உள்ளதை தெளிவுப்படுத்தினார்)

8)      என்ரிக் பெனா நீட்டோ என்பவர் எந்த நாட்டு அதிபர ஆவார்?
மெக்ஸிகோ
கனடா
பிரேசில்
இஸ்ரேல்

விடை: மெக்ஸிகோ ( ஒசோகா ஜி20 மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மெக்ஸிகோ வெளியுறவுத்துறை அமைச்சர்  மார்செலோ எப்ரார்ட், கனடா வெளியுறவு துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுடன் உறவு மேம்பாடு குறித்து பேசினார்) ( இந்தியாவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே கடந்த 2016 ஆம் ஆண்டு பொருளாதாரம், அறிவியல் ஆகியவற்றில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது)

9)      நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய புதிய ரக ஏவுகணை பரிசோதனை எந்த நாடு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது?
ரஷ்யா
இஸ்ரேல்
சீனா
அமெரிக்கா

விடை: சீனா ( நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவக்கூடிய ‘பலிஸ்டிக்’ ரக ஏவுகணையான (எஸ்எல்பிஎம்)  ஜே எல் – 3 வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக அந்த நாடு அரசு செய்தி நிறுவனமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

10)  நாசா , எந்த கிரகத்தின் நிலவின் மீது ஆளில்லா விமானம் மூலம் பரிசோதனை செய்ய உள்ளது?
செவ்வாய்
வெள்ளி
சனி
நெப்டியூன்

விடை: சனி ( சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் (62 நிலவுகளில் ஒன்று) டிராகன்ஃப்ளை என்ற ஆளில்லா விமானத்தின் மூலம் ஆய்வு செய்ய உள்ளது. ( கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்) இதற்கான செலவு 85 கோடி டாலர் (5,850 கோடி) ஆகும். இது வரும் 2026 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. இது 2034 இல் டைட்டனில் தரையிறங்கும்)

11)  இணைய நேரலை முறையில் பட்டமளிப்பு வழங்க உள்ள முதல் பல்கலைக்கழகம் எது?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
அன்னை தெரசா பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்

விடை: டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் ( தமிழ்நாட்டில் முதல்முறையாக) (இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன்)

12)  சவுதி அரேபியா இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை எவ்வளவு அதிகரித்துள்ளது?
1.80 லட்சம்
1.90 லட்சம்
2.00 லட்சம்
2.10 லட்சம்

விடை: 2.00 லட்சம் ( இது கடந்த ஆண்டை விட 30,000 பேர் அதிகம். ஒசாகா ஜி20 மாநாட்டிற்கு பிறகு இந்திய பிரதமர் மோடிக்கும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2017 இல் 35,000 ஆகவும், கடந்த ஆண்டு 5,000 ஆகவும், இந்த ஆண்டு 30,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது)

2019 ஆம் ஆண்டுகான மிஸ் ஆஸ்திரேலிய பட்டத்தை இந்திய பெண் பிரியா செராயோ பெற்றுள்ளார். மெல்போர்னில் இந்த போட்டி நடைபெற்றது.

பிரான்ஸில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி உள்ளது. தற்போது வெப்பநிலை 45.8 டிகிரி செல்சியஸ் ஆகும். இதற்கு முன் 2003 இல் 44.1 டிகிரி செல்சியஸ் அதிக அளவாகும்.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

Thursday 27 June 2019

ஜூலை 28 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 28 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு கழகம் ( செட்ஸ் ) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1992
1997
2002
2007

விடை: 2002  ( சென்னை தரமணியில் இதன் அலுவலகம் உள்ளது. இதன் 18 ஆம் ஆண்டு விழா ஜூன்25 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.  செட்ஸ் தலைவர் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன். (மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கீழ் இயங்கும் அமைப்பாகும்) இதன் முதல் தலைவராக இருந்தவர் ஆர்.சிதம்பரம். இவர் தற்போது பாபா அணு சக்தி மைய தலைவராக உள்ளார் )

2)      சர்வதேச அனைத்து தர போட்டிகளிலும் சேர்த்து 20,000 ரன்களை குறைந்த இன்னிங்சில் கடந்த முதல் வீரர்  யார்?
மகேந்திரசிங் டோனி
விராட் கோலி
சச்சின் டெண்டுல்கர்
பிரையன் லாரா

விடை: விராட்கோலி ( டெஸ்ட்6.613, ஒருநாள் 11.159, டி20 2,263 ) இவர் இவர் சாதனையை 417 போட்டிகளில் எடுத்துள்ளார். இதற்கு முன் சச்சின் மற்றும் லாரா ஆகியோர் 453 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3)      சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு எத்தனிய கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்?
10 கோடி லிட்டர்
15 கோடி லிட்டர்
20 கோடி லிட்டர்
25 கோடி லிட்டர்

விடை: 15 கோடி லிட்டர் (இதற்கான மொத்த தொகை 1259 கோடி 38 லட்சம்) ( இதற்கான நிதி ஜெர்மனி நிறுவனமான கே.எப்.டபிள்யூ விடம் கடனுதவியாகவும் , மீதித்தொகை மத்திய அரசி அம்ருத் திட்டத்தின் கீழ் மானியமாகவும் பெறப்படும்.) 
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      இந்தியாவில் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
3.4 கோடி
3.9 கோடி
4.2 கோடி
4.6 கோடி

விடை: 4.6 கோடி  ( 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3.8 கோடி குழந்தைகள் அதிக எடை கொண்டவர்கள்)

5)      ஸ்நாப்செக்யூர் (Snapsecure) என்ற செயலி எதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது?
பெண்களின் பாதுகாப்பிற்கு
சரக்கு பெட்டகங்களில் ஏற்றுமதி கண்காணிக்க
மத்திய அரசின் திட்டங்கள் அறிந்து கொள்ள
மின்னணு பரிவர்த்தனைக்கு

விடை: சரக்கு பெட்டகங்களில் ஏற்றுமதி கண்காணிக்க

6)      சென்னை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆட்சியர் யார்?
ஆர்.சீதாலட்சுமி
எம்.விஜயலட்சுமி
எஸ்.ஏ.ராமன்
ரோகிணி ஆர்.பாஜீபாகரே

விடை: ஆர்.சீதாலட்சுமி ( இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு இசை மற்றும் கவின்க்லை பல்கலைக்கழக பதிவாளராக இருந்தார். தற்போது இந்த இடத்திற்கு ரோகிணி (சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்) எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்)

7)      யுனெஸ்கோ எந்த ஆண்டை சர்வதேச தனிமங்கள் அட்டவணை ஆண்டாக அறிவித்துள்ளது?
2019
2020
2021
2022

விடை: 2019

8)      உலகின் மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையான ‘ராஸ் அல்கைர்’ எந்த நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது?
குவைத்
சவுதி அரேபியா
ஈரான்
கத்தார்

விடை: சவுதி அரேபியா ( இங்கு ஒரு நாளைக்கு 100 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது) (உலகம் முழுவதும் 18,426 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு நாளில் 30கொடி மக்களுக்கு பாதுகாப்பான  குடிநீரை வழங்குவதாக பன்னாட்டு உப்பு நீக்கிக் கழகம் கணக்கெடுப்பில் கூறியுள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      தேர்தல் நிதிப் பத்திரங்கள் எந்த வங்கி விநியோகிக்கிறது?
ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பேங்க் ஆஃப் பரோடா

விடை: ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா ( இந்த  தேர்தல் நிதி பத்திரம் விநியோக்கிக்கும் முறை 2018 ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது) (ஈதன் படி ரூ.1000, ரூ.10,000, ரூ 1 லட்சம், ரூ.10 லட்சம் , ரூ. 1கோடி மதிப்பிலான நிதிப்பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் முதல் 10 நாட்கள் மட்டும் விநியோகிக்கப்படுகின்றன. இதில் நாடு முழுவது உள்ள 26 ஸ்டேட் பாங்க் மையங்களில் கொடுக்கப்படுகின்றன. இதன் படி ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை இந்த நிதி  பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இப்போது 11 வது கட்டமாக விற்பனைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது)

10)  காற்றில் இருந்து தண்ணீர் பிரித்து தரும் கருவியை உருவாக்கிய முதல் நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்தது?
பிரான்ஸ்
அமெரிக்கா
இஸ்ரேல்
சவுதி அரேபியா

விடை: இஸ்ரேல் ( வாட்டர்-ஜென் என்ற நிறுவனம் 2016 செப்டம்பர் மாதம் ஐ.நா பொது சபை கூட்டத்தில் அறிவித்துவிட்டது. சென்னை  இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தற்போது இதே போன்ற “நீரோ” என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது. இது சூரிய மின்சாரம் மூலம் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது )

11)  கிரீன்டெக் சுற்றுச்சூழல் விருது 2019 பெற்றுள்ள ராம்கோ சிமென்ட்ஸ் ஆலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விருதுநகர்
திருநெல்வேலி
அரியலூர்
பெரம்பலூர்

விடை: அரியலூர் ( இந்த விருது ஜூலை 11 ஆம் தேதி புதுடெல்லியில் வழங்கப்பட உள்ளது)

12)  நாசவில் ஆசியாவை சேர்ந்த எத்தனை சதவீத பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்?
5%
7%
10%
15%

விடை: 7%