Tuesday 25 June 2019

ஜூன் 26 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 26 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தமிழகத்துக்கான ஜூன் , ஜூலை மாதங்களில் எத்தனை டி.எம்.சி நீரை விடுவிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு செய்துள்ளது?
9.24
19.24
30.24
40.24

விடை: 40.24  ( காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார். காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் ஹூசேன் ) ( ஜூன் மாதம் திறந்துவிட கூறிய 9.19 டி.எம்.சி நீரில் 1.885 டி.எம்.சி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது)

2)      தமிழகத்தில் எந்த இடத்தில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?
மீஞ்சூர்
நெம்மேலி
பட்டிணப்பாக்கம்
சோழவரம்

விடை: நெம்மேலி  ( கிழக்கு கடற்கரை சாலை ) ( நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள காட்டுப்பள்ளி ஆகிய இடத்தில் ஏற்கனவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நெம்மேலியில் 2வது திட்டம் 15 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதிப்பீத் 1689 கோடி )

3)      வாஹன் என்ற மென்பொருள் எந்த துறையில் பயன்படுத்தப்படுகிறது?
நிதித்துறை
சுகாதாரத்துறை
போக்குவரத்து துறை
ஊரக வளர்ச்சி துறை

விடை: போக்குவரத்து துறை ( சாரதி என்ற மென்பொருளும் பயன்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட இ-சலான் கருவி போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காவலர்கள் அபராதம் விதித்த இடத்திலேயே ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணம் வசூல் செய்யும் வசதி, புகைப்படக்கருவி, ஜி.பி.எஸ் வசதி எல்லாம் உள்ள இந்த கருவி வாஹன் மற்றும் சாரதி மென்பொருளில் நேரடியாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ) ( நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும். ) 

4)      ஜூலை 4 இல் தொடங்க உள்ள தமிழாராய்ச்சி மாநாடு எத்த்னையாவது மாநாடாகும்?
5
10
15
20

விடை: 10 ( இதில் சொற்குவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த மாநாட்டை  அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (ஐஏடிஆர்), வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (ஃபெட்னா), சிகாகோ தமிழ்ச் சங்கம் (சிடிஎஸ்) ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில் ஜூலை 4 முதல் 7 வரை நடைபெற உள்ளது) (உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம்)

5)      உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
10
20
25
30

விடை: 25 ( ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேற்றத்தை தடுப்பதற்காக புதிய விழிப்புணர்வு பிரசாரம் சென்னையில் அறவே வாய்ப்பில்லை ( ஜீரோ சான்ஸ் ) என்ற மையக் கருத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது) (இதனை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக பிராந்திய இயக்குநர டாரா கவானா தொடங்கினார்)

6)      பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்பெற்று ஏமாற்றியவர்களில் ஒருவரான மெஹூல் சோக்ஸியை எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த தயாரக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
ஆஸ்திரேலியா
பிரிட்டன்
ஆன்டிகுவா
ஆஸ்திரியா

விடை: ஆன்டிகுவா ( இந்த நாட்டு பிரதமர் கேஸ்டன் பிரௌன் தெரிவித்துள்ளார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

7)      மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில்  சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள மாநிலம் எது?
ஆந்திரம்
தமிழ்நாடு
பஞ்சாப்
கேரளம்

விடை: கேரளம் (ஆந்திரம் 2, மகாராஷ்டிரம் 3, குஜராத் 4, பஞ்சாப் 5, ஹிமாசலப்பிரதேசம் 6) ( 9வது தமிழ்நாடு) (சிறிய மாநிலங்கள் பிரிவில் மிஸோரம் முதலிடம்) ( யூனியன் பிரதேசங்களில் சண்டீகர் முதலிடம், இரண்டாம் இடம் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ) ( இந்த பட்டியலை நிதி ஆயோக் ‘ஆரோக்கியமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா’ என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது)

8)      நெருக்கடி நிலையில் சிறையில் இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
உத்திரப்பிரதேசம்

விடை: மகாராஷிடிரா ( 1 மாதம் இருந்தவர்களுக்கு 5000 ரூபாயும், 1 மாதத்திற்கு மேல் இருந்தவர்களுக்கு 10,000 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு)

9)      தமிழக அரசு வெளியிட்டுள்ள TN-SMART செயலி எதற்காக உதவுகிறது?
தமிழக திட்டங்களை அறிந்து கொள்ள
பேரிடர் குறித்த தகவல்கள் அறிய
சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக்கு
பள்ளிக் குழந்தைகள் திறனை மேம்படுத்த

விடை: பேரிடர் குறித்த தகவல்கள் அறிய ( இதன் சிறப்பம்சம் செல்போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் இந்த செயலி எச்சரிக்கை ஒலியுடன் செய்தியை அனுப்பும்)

10)  கடலோர காவல்படை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1958
1968
1978
1988

விடை: 1978 ( ஆகஸ்டு) ( இதன் புதிய இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் 1984 ஜனவரியில் கடலோர காவல் படையில் இணைந்தார். மேற்கு பிராந்திய கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார். தற்போது இயக்குநராக உள்ள ராஜேந்திர சிங்கின் பதவி காலம் வரும் 30 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இவர் அதே தேதியில் பதவி ஏற்க உள்ளார்)
                நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை                              தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து                        நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது                            கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள்                                  நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

1 comment:

  1. Bro revise one week portion it is better to remember

    ReplyDelete