Wednesday 12 June 2019

ஜூன் 13 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 13 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     சந்திராயன் 2 விண்கலத்தில் செலுத்தப்படவுள்ள எந்த பகுதிக்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது?
ஆர்பிட்டர்
லேண்டர்
ரோவர்
லேசர் கருவி

விடை:  லேண்டர் ( விக்ரம் சாராபாய் நினைவாக வைக்கப்பட்டுள்ளது)  (ரோவருக்கு  பிரக்யான் என்று பெயரிடப்பட்டுள்ளது) (ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 ஏவுகணை ஏவப்பட உள்ளது)(ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்றும் சேர்ந்து 1.8 டன் எடை கொண்டதாக உள்ளது.  ஜிஎஸ்எல்வி பகுதியுடன் இணைந்து 3.8 டன் எடை கொண்டதாக் உள்ளது)

2)     சந்திராயன் 2 இல் ஆர்பிட்டரில் எத்தனை ஆராய்ச்சிக் கருவிகள் இணைக்கப்பட உள்ளது?
3
5
6
8

விடை: 8 ( லேண்டரில் 3 ஆராய்ச்சிக் கருவிகளும், ரோவரில் 2 ஆராய்ச்சிக் கருவிகளும் உள்ளது)

3)      சந்திராயன் 2 இல் உள்ள லேசர் ரெஃலெக்டர் ஆர்ரே கருவி எந்த நிறுவனத்தின் கருவியாகும்?
நாசா
இஸ்ரோ
ஸ்பேஸ் எக்ஸ்
ஐரோப்பிய யூனியன்

விடை: நாசா ( இந்த கருவி பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள தொலைவைக் கணக்கிடும்)

4)      சந்திராயன் திட்ட இயக்குநராக உள்ளவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
டில்லிபாபு
வனிதா
ராமச்சந்திரன்

விடை: வனிதா ( இந்த திட்டத்தில் பணிய்யற்றும் விஞ்ஞானிகளில் 33% பேர் பெண்கள் ஆவர்)

5)      தமிழக மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் தாய் அவசர சிகிச்சையில் பின்பற்றப்படும் நடைமுறை எந்த் நாட்டில் இருந்து பின்பற்றப்படுகிறது?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஆஸ்திரியா
ஆப்கானிஸ்தான்

விடை: ஆஸ்திரேலியா ( விக்டோரியா மாகாணம்) (தமிழ்நாட்டில் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட 75 மருத்துவமனைகளில் இந்த திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பாட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆலோசிக்க இந்தியாவுக்கான் ஆஸ்திரேலிய தூதர் சூசன், தூதரக அதிகார் மைக்கேல் கோஸ்டா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்)

6)      பீலா ராஜேஷ் என்பவர் தமிழ்நாட்டின் எந்த துறையின் செயலராக உள்ளார்?
உள்துறை
போக்குவரத்து துறை
சுகாதாரத்துறை
ஊரக வளர்ச்சி துறை

விடை: சுகாதாரத்துறை ( இராதாகிருஷ்ணன் – போக்குவரத்து துறை)

7)      பி.என். நவலவாலா என்பவர் எந்த குழுவின் தலைவராக உள்ளார்?
நதிநீர் இணைப்பு
ரிசர்வ் வங்கி கூடுதல் நிதி மத்திய அரசிடம் வழங்குதல்
பாதுகாப்பு துறையில் மாற்றம் கொண்டுவர
பொருளாதார மேம்பாட்டுக்கு

விடை: நதிநீர் இணைப்பு (ரிசர்வ் வங்கி கூடுதல் நிதி மத்திய அரசிடம் வழங்குதல் குழுவின் தலைவர் பிமல் ஜலான் (ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்)  குழு அமைக்கப்பட்டது டிசம்பர் 26)

8)      சன் வெய்டோங் என்பவர் இந்தியாவுக்கான எந்த நாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
தாய்லாந்து
ஜப்பான்
சீனா
இந்தோனேஷியா

விடை: சீனா

9)      எந்த மாநிலத்தில் சிறைக்கைதிகளே நடத்தும் வானொலி மையம் செயல்பட தொடங்கி உள்ளது?
ஆந்திரா
தெலுங்கானா
கர்நாடகா
மகாராஷ்டிரா

விடை: தெலுங்கானா (அந்தர்வாணி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது) (மாநிலத்தில் உள்ள அனைத்து சிறை வளாகங்களிலுமி செயல்படுத்தப்பட்டு உள்ளது) ( இந்த மாநில சிறைத்துறை இயக்குநர் வி.கே.சிங்)

10)  மகளிர் கால்பந்து உலகக்கோப்பை எந்த நாட்டில் நடைப்பெற்று வருகிறது?
இரஷ்யா
போர்ச்சுக்கல்
ஸ்பெயின்
பிரான்ஸ்

விடை: பிரான்ஸ் ( ரெய்ம்ஸ் நகர் ) ( இந்த போட்டியின் முதல் ஆடத்தில் அமெரிக்கா தாய்லாந்து அணியை 13-0 என்ற கோல்கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது) ( இதற்கு முன்பு ஜெர்மனி 11-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதே இதற்கு முன்பு உலக்கோப்பை போட்டியின் அதிக பட்ச சாதனை)

11)  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகில் அதிக வருவாய் ஈட்டும் வீரராக யார் குறிப்பிடப்பட்டு உள்ளார்?
மெஸ்ஸி
ரொனால்டோ
நடால்
பெடரர்

விடை: மெஸ்ஸி ( 880 கோடி) (2வது இடம் ரொனால்டோ 755 கோடி)                      (  இந்தியாவில் கோலி மட்டுமே இடம் பெற்றுளார் 100வது இடம் 175 கோடி கடந்த வருடம் இவர் 83 வது இடத்தில் இருந்தார்)

12)  பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷூக்கு தற்போது என்ன விருது வழங்கப்பட்டு உள்ளது?
சாகித்திய அகாதெமி விருது
ஞானபீட விருது
பத்மபூஷன் விருது
பத்ம விபூஷன் விருது

விடை: ஞானபீட விருது (இவ்விருது பெறும் முதல் ஆங்கில எழுத்தாளர் ஆவார்)


No comments:

Post a Comment