Friday 14 June 2019

ஜூன் 15 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 15 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     சுற்றுலாப் துறையின் இணையதளம் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் எந்த மொழியில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
ஆங்கிலம்
பிரெஞ்சு
ரஷ்யன்
அரபிக்

விடை: ரஷ்யன்  (ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது)

2)      புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி துறையில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
3
5
6
8

விடை: 6 ( சூரிய ஒளி ஆற்றல்  மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது)

3)      அமெரிக்காவின் எத்தனை பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்துள்ளது?
22
25
26
29

விடை: 29 ( இதன் மூலம் மத்திய அரசுக்கு 1,514 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். ஜூன் 15 முதல் இந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது.  கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 25% , அலுமினியம் 10% வரியை அமெரிக்கா உயர்த்தியது. அதற்கு பதிலடியாக இந்தியா இந்த வரி உயர்வை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முன் பல முறை இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை இந்தியா தள்ளிவைத்தது.   வால்நட் மீதான் வரி 30% இல் இருந்து 120 சதவீதமாகவும், பருப்பு வகைகள் 30% இல் இருந்து 70% ஆகவும், பிளாஸ்டிக் பொருள்கள் 7.5% ஆகவும், சோதனைப் பொருள்கள்  மீதான வரி 10% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது)

4)      பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே காவல் துறையிடம் புகார் தெரிவிக்க எந்த செயலி அறிமுகப்படுத்தப்படு உள்ளது?
DIGI COP
GCTP CITIZEN
DIGI COP 2
GCTP CITIZEN 2

விடை: DIGI COP 2 ( அவ்வாறு அளிக்கப்பட்ட புகாரின் தற்போதைய நிலை மற்றும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட  வழக்கு சி.எஸ்.ஆர். ஆகியவை பற்றி தகவல்களி தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன் வெளியிடப்பட்ட DIGI COP செயலி தொலைந்து போன செயலிகளை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய செயலியாகும், GCTP CITIZEN செயலி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதன் போக்குவரத்து துறையில் நடக்கும் விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது.)

5)      2019 ஆம் ஆண்டிற்கான பால புரஸ்கார் விருது யாருக்கு அளிக்கப்பட்டது?
தேவிநாச்சியப்பன்
அழ. வள்ளியப்பா
சபரிநாதன்
எஸ்.ராமகிருஷ்ணன்

விடை: தேவிநாச்சியப்பன் ( இவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள் ஆவார். இவருக்கு குழந்தை இலக்கியத்திற்காக ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவருடைய “பந்தும் பாப்பாவும்”, “புத்தகத்திருவிழா” புத்தகங்கள் பாராட்டுக்கள் பெற்றது.

யுவ புரஸ்கார் விருது சபரிநாதனுக்கு “வால்” என்ற கவிதை நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைய சேர்ந்தவர். இவரின் இன்னொரு புகழ்பெற்ற நூல் களம்-காலம்-ஆட்டம். அதுமட்டும் இல்லாமல் ஆஸ்கார் விருது பெற்ற ஸ்கான்டிநேவிக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்னின் கவிதைகளை “உறைபனிக்கு கீழே” என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

6)      பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த ஆண்டு?
1947
1967
1987
1997

விடை: 1997 ( ஒரு நாடு இரு நிர்வாகம் என்ற முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததது. தற்போது ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்கள் சீனாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்)

7)      2019 மராமத்து பணிகளுக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு?
499.68 கோடி
599.68 கோடி
699.68 கோடி
799.68 கோடி

விடை: 499.68 கோடி ( முதலில் 2017 ஆம் ஆண்டு இந்த திட்டம் சோதனை அடிப்படையில் 100 கோடி ஒதுக்கி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 2017 -18 இல் 331.68 கோடி ஒதுக்கப்பட்டது)

8)      இந்தியா இரஷ்யாவிடம் இருந்து எந்த ஏவுகணை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது?
எஸ் 100
எஸ் 400
எஸ் 600
எஸ் 800

விடை: எஸ் 400 ( 500 கோடி டாலர் (3.49 லட்சம் கோடி) செலவில் வாங்க திட்டமிட்டுள்ளது இந்தியா. இதற்கு மத்திய மற்றும் தெற்கு ஆசிய விவகாரங்களுக்கான மூத்த அதிகார் ஆலிஸ்.ஜெ.வெல்ஸி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு குறையும் என தெரிவித்துள்ளார்)

9)      நிதி ஆயோக்கின் எத்தனையாவடு கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது?
2
3
4
5

விடை: 5 (முதல் கூட்டம்  பிப்ரவர் 15,2018, 2வது ஜூலை 15,2015, 3வது ஏப்ரல் 23 2017, 4வது கூட்டம் ஜூன்17, 2018 இல் நடைபெற்றது)

10)  பணியிடத்தில சமத்துவம் கோரி எந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது?
ஆஸ்திரேலியா
பிரான்ஸ்
ஸ்விட்சர்லாந்து
பின்லாந்து

விடை: ஸ்விட்சர்லாந்து (இதற்கு முன் 28 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது)



No comments:

Post a Comment