Tuesday 11 June 2019

ஜூன் 12 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 12 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     மக்களவை இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வீரேந்திர குமார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மத்திய பிரதேசம்
மகாராஷ்டிரா
கர்நாடகா
இராஜஸ்தான்

விடை: மத்திய பிரதேசம் ( டீகம்கர் தொகுஹ்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்). இது வரை மக்களவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2)      பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் என்ற திட்டத்தின் கீழ் எது வராது?
பள்ளிகள், கல்லூரிகள்
பெண்கள் விடுதிகள்
பொது சேவை மையங்கள்
நகராட்சி மையங்கள்

விடை: நகராட்சி மையங்கள் ( இந்த திட்டம் கல்வி கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் மேற்கூறிய அமைப்புகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

3)      அனைவருக்கும் தூய குடிநீர் வழங்க எந்த ஆண்டு வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது?
2021
2022
2024
2026

விடை: 2024 (நீர்வளத்துறை அமைச்சர்  கஜேந்திர சிங்க் ஷெகாவத் தெரிவித்துள்ளார்)

4)      அருணாசலப்பிரதேச மாநிலத்தில் காணாமல் போன ஏஎன்32 என்ற விமானத்தை கண்டுபிடித்த விமானம் எது?
எம்ஐ 17
எம்ஐ 18
எம்ஐ 19
எம்ஐ 20

விடை: எம்ஐ 17 (அருணாசலப்பிரதேசம் லிபோ பகுதியில் இருந்து வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் சீன எல்லை அருகில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

5)      எல்.இ.டி விளக்கு வேகத்தடை இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா

விடை: தமிழ்நாடு (இந்த வேகத்தடை போக்குவரத்ஹ்டு சிக்னல்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும்)

6)      தமிழகம் முழுவது எத்தனை மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது?
30 லட்சம்
50 லட்சம்
70 லட்சம்
90 லட்சம்

விடை: 70 லட்சம்(வாரம் ஒரு முறை பாலியல் கல்வி வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

7)      மத்திய ஊழல் கண்காணிப்பு பிரிவின் இடைக்கால ஆணையராக யார் நியமிக்கபட்டுள்ளார்?
கே.வி.சௌதாரி
டி.எம்.பாஸினின்
சரத்குமார்
ராமகிருஷ்ணன்

விடை: சரத் குமார் (இவர் தேசிய புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த இவர் கடந்த ஜூன் 12, 2018 இல் இந்த அமைப்பில்  ஆணையராக சேர்க்கப்பட்டார்.) ( நிரந்தர ஆணையரை நியமிக்க மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை கடந்த மார்ச் மாதம் முதல் முயற்சி மேற்கொண்டுள்ளது)

8)      திவால் மற்றம் வாராக் கடன் வாரியம் (ஐபிபிஐ)  எப்போது ஏற்படுத்தப்பட்டது?
2015
2016
2017
2018

விடை: 2016 (அக்டோபர் 1). தலைமை பொருளாதார ஆலோசகரான  கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இதில் பகுதி நேர உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் ஐடிபிஐ முன்னாள் நிர்வாக இயக்குநரான பி.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்)

9)      ஆசியாவின் மிகப்பெரிய கொள்முதல் சந்தை எந்த இடத்தில் உள்ளது?
மத்தியப்பிரதேசம்
உத்திரப்பிரதேசம்
ஆந்திரா
மகாராஷ்டிரா

விடை: மகாராஷ்டிரா ( லசால்கான் )(இங்கு வெங்காய விலை மிகவும் அதிகரித்து உள்ளதாலும், பல்வேறு மாநிலங்களில் பருவமழை பொய்த்துப்போய் உள்ளதாலும் வெங்காய ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட 10% சலுகை நீக்கப்பட்டுள்ளது)(மத்திய அரசு உணவு சேமிப்பு கிடங்கில் 50,000 டன் வெங்காயம் சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது)

10)  எந்த நாட்டில் கைது செய்யப்படுவோர் நாடு கடத்தும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது?
மலேசியா
ஹாங்காங்
தாய்லாந்து
இந்தோனேசியா

விடை: ஹாங்காங் ( இங்கு கைது செய்யப்படுவோர் சீனாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற சட்டத்திற்கு வலுப்பு அதிகமாகியுள்ளது)(ஆனால் இது நிறைவேற்றப்படும் என ஹாங்காங் அமைப்பின் தலைவர் கேரீ லாம் தெரிவித்துள்ளார்)

11)  கல்யாண்சிங் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவார்?
இராஜஸ்தான்
கர்நாடகா
இமாச்சலபிரதேசம்
மணிப்பூர்

விடை: இராஜஸ்தான் ( இமாசலப்பிரதேசம் ஆச்சார்ய தேவ் விராட், உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா)

12)  தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
ராமச்சந்திரா
டில்லிபாபு
கே.எஸ்.சர்மா
ராமமூர்த்தி

விடை: டில்லிபாபு



No comments:

Post a Comment