Thursday 27 June 2019

ஜூலை 28 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 28 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு கழகம் ( செட்ஸ் ) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1992
1997
2002
2007

விடை: 2002  ( சென்னை தரமணியில் இதன் அலுவலகம் உள்ளது. இதன் 18 ஆம் ஆண்டு விழா ஜூன்25 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.  செட்ஸ் தலைவர் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன். (மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கீழ் இயங்கும் அமைப்பாகும்) இதன் முதல் தலைவராக இருந்தவர் ஆர்.சிதம்பரம். இவர் தற்போது பாபா அணு சக்தி மைய தலைவராக உள்ளார் )

2)      சர்வதேச அனைத்து தர போட்டிகளிலும் சேர்த்து 20,000 ரன்களை குறைந்த இன்னிங்சில் கடந்த முதல் வீரர்  யார்?
மகேந்திரசிங் டோனி
விராட் கோலி
சச்சின் டெண்டுல்கர்
பிரையன் லாரா

விடை: விராட்கோலி ( டெஸ்ட்6.613, ஒருநாள் 11.159, டி20 2,263 ) இவர் இவர் சாதனையை 417 போட்டிகளில் எடுத்துள்ளார். இதற்கு முன் சச்சின் மற்றும் லாரா ஆகியோர் 453 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3)      சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு எத்தனிய கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்?
10 கோடி லிட்டர்
15 கோடி லிட்டர்
20 கோடி லிட்டர்
25 கோடி லிட்டர்

விடை: 15 கோடி லிட்டர் (இதற்கான மொத்த தொகை 1259 கோடி 38 லட்சம்) ( இதற்கான நிதி ஜெர்மனி நிறுவனமான கே.எப்.டபிள்யூ விடம் கடனுதவியாகவும் , மீதித்தொகை மத்திய அரசி அம்ருத் திட்டத்தின் கீழ் மானியமாகவும் பெறப்படும்.) 
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      இந்தியாவில் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
3.4 கோடி
3.9 கோடி
4.2 கோடி
4.6 கோடி

விடை: 4.6 கோடி  ( 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3.8 கோடி குழந்தைகள் அதிக எடை கொண்டவர்கள்)

5)      ஸ்நாப்செக்யூர் (Snapsecure) என்ற செயலி எதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது?
பெண்களின் பாதுகாப்பிற்கு
சரக்கு பெட்டகங்களில் ஏற்றுமதி கண்காணிக்க
மத்திய அரசின் திட்டங்கள் அறிந்து கொள்ள
மின்னணு பரிவர்த்தனைக்கு

விடை: சரக்கு பெட்டகங்களில் ஏற்றுமதி கண்காணிக்க

6)      சென்னை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆட்சியர் யார்?
ஆர்.சீதாலட்சுமி
எம்.விஜயலட்சுமி
எஸ்.ஏ.ராமன்
ரோகிணி ஆர்.பாஜீபாகரே

விடை: ஆர்.சீதாலட்சுமி ( இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு இசை மற்றும் கவின்க்லை பல்கலைக்கழக பதிவாளராக இருந்தார். தற்போது இந்த இடத்திற்கு ரோகிணி (சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்) எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்)

7)      யுனெஸ்கோ எந்த ஆண்டை சர்வதேச தனிமங்கள் அட்டவணை ஆண்டாக அறிவித்துள்ளது?
2019
2020
2021
2022

விடை: 2019

8)      உலகின் மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையான ‘ராஸ் அல்கைர்’ எந்த நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது?
குவைத்
சவுதி அரேபியா
ஈரான்
கத்தார்

விடை: சவுதி அரேபியா ( இங்கு ஒரு நாளைக்கு 100 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது) (உலகம் முழுவதும் 18,426 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு நாளில் 30கொடி மக்களுக்கு பாதுகாப்பான  குடிநீரை வழங்குவதாக பன்னாட்டு உப்பு நீக்கிக் கழகம் கணக்கெடுப்பில் கூறியுள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      தேர்தல் நிதிப் பத்திரங்கள் எந்த வங்கி விநியோகிக்கிறது?
ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பேங்க் ஆஃப் பரோடா

விடை: ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா ( இந்த  தேர்தல் நிதி பத்திரம் விநியோக்கிக்கும் முறை 2018 ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது) (ஈதன் படி ரூ.1000, ரூ.10,000, ரூ 1 லட்சம், ரூ.10 லட்சம் , ரூ. 1கோடி மதிப்பிலான நிதிப்பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் முதல் 10 நாட்கள் மட்டும் விநியோகிக்கப்படுகின்றன. இதில் நாடு முழுவது உள்ள 26 ஸ்டேட் பாங்க் மையங்களில் கொடுக்கப்படுகின்றன. இதன் படி ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை இந்த நிதி  பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இப்போது 11 வது கட்டமாக விற்பனைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது)

10)  காற்றில் இருந்து தண்ணீர் பிரித்து தரும் கருவியை உருவாக்கிய முதல் நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்தது?
பிரான்ஸ்
அமெரிக்கா
இஸ்ரேல்
சவுதி அரேபியா

விடை: இஸ்ரேல் ( வாட்டர்-ஜென் என்ற நிறுவனம் 2016 செப்டம்பர் மாதம் ஐ.நா பொது சபை கூட்டத்தில் அறிவித்துவிட்டது. சென்னை  இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தற்போது இதே போன்ற “நீரோ” என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது. இது சூரிய மின்சாரம் மூலம் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது )

11)  கிரீன்டெக் சுற்றுச்சூழல் விருது 2019 பெற்றுள்ள ராம்கோ சிமென்ட்ஸ் ஆலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விருதுநகர்
திருநெல்வேலி
அரியலூர்
பெரம்பலூர்

விடை: அரியலூர் ( இந்த விருது ஜூலை 11 ஆம் தேதி புதுடெல்லியில் வழங்கப்பட உள்ளது)

12)  நாசவில் ஆசியாவை சேர்ந்த எத்தனை சதவீத பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்?
5%
7%
10%
15%

விடை: 7%

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.






No comments:

Post a Comment