Saturday 29 June 2019

ஜூன் 30 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 30 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தற்போது தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்கவுள்ள கே.சண்முகம் இதற்கு முன் எந்த துறை செயலராக இருந்தார்?
உள்துறை செயலர்
தொழில்துறை செயலர்
நிதித்துறைச் செயலர்
சுகாதாரத்துறைச் செயலர்

விடை: நிதித்துறைச் செயலர் ( 2010 -2019) ( 46 வது தலைமைச் செயலாளர் ஆவார்.  முதல் தலைமைச் செயலாளர் எஸ்.வி.ராமமூர்த்தி 1940 நவம்பர் 27 இல் இருந்தார்.  விடுதலை இந்தியாவின் முதல் செயலாளர்  ராமுன்னி மேனன். 1969இல் இந்திய சிவில் சர்விஸ் ( ஐசிஎஸ் ) ஆனது ஐஏஎஸ் ஆக மாற்றப்பட்ட பின் தலைமைச் செயலாளர் இ.பி.ராயப்பா ஆவார்.  வி. கார்த்திகேயன், டி.வ்.அந்தோணி  ஆகியோர் இருமுறை தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர். தலைமைச் செயலாளர் ஓய்வு பெறும் வயது 60. தற்போதைய தலைமை செயலாளர் அடுத்த ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார்)

2)      தற்போது புழக்கத்தில் இல்லாத நாணயம் எது?
25 பைசா
50 பைசா
1 ரூபாய்
25 பைசா மற்றும் 50 பைசா

விடை: 50 பைசா ( அரசு வெளியிட்ட நாணயங்களை வாங்க மறுப்பது விதிமீறலாகும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது)

3)      போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 1000ரூபாய் அபராதம் விதித்துள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
தெலுங்கானா
கர்நாடகா

விடை: கர்நாடகா  ( மீண்டும் செய்தால் 200 ரூபாய் அபராதம் )
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      இந்திய அணி எந்த அணியுடன் ஆரஞ்சு மற்றும் நீலம் கலந்த சீருடையில் விளையாடுகிறது?
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
வெஸ்ட் இண்டிஸ்
மேற்கு இந்திய தீவுகள்

விடை: இங்கிலாந்து ( அந்த அணியும் நீல நிற உடையில் இருப்பதால் வேறுபடுத்திகாட்ட ஆடுகிறது. இந்த ஆடாம் எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 30 இல் நடைபெறுகிறது)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      இந்திய உணவு உற்பத்தி நிறுவனத்தின் தலைமையகம் எந்த இடத்தில் உள்ளது?
டெல்லி
மும்பை
இராஜஸ்தான்
சென்னை

விடை: இராஜஸ்தான் ( ஜெய்ப்பூர் ) ( இதன் தலைவர் சிவசங்கர் குப்தா. இவர் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களின் உப்பில் அபாயகரமான சயனைடு கலந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்) ( இந்தியாவுன் முன்னனி நிறுவனங்களிடம் இருந்து ஆய்வுக்கு எடுக்கப்பட்ட மாதிரியை அமெரிக்க யூட்டா மாகாணம் சால்ட் லேக் சிட்டியில் உள்ள ‘அமெரிக்கன் வெஸ்ட் அனலிட்டிக்கல் லேபரேட்டரீஸ்’ ஆய்வகத்துக்கு அனுப்பியதில் அபாய்கரமான பொட்டாசியம் பெர்ரோசயனைடு கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது) (இதனை மறுத்துள்ள சில நிறுவனங்கள் ஒரு கிலோ உப்பில் 14 கிராம் பெர்ரோசய்னைடு  பயன்படுத்தலாம் என இந்திய உணவு  பாதுகாப்பு தர நிர்ணய் ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது)

6)      இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் 3.5 கோடி டாலர் வர்த்தகம் மேற்கொள்ள எந்த ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது?
2020
2021
2023
2025

விடை: 2025 ( ஜப்பானின் ஒசாகா நகரில் ஜொ20 நாடுகளின் 14 வது உச்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா பிரதமரும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோஉவ்டன் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது)  ( இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல் சொனாரோவையும், துருக்கி அதிபர் எர்டோகன், சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், சிலி நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்)
கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.

7)      ‘எட்ஜ் பாஸ்ட் ‘ தொழில்நுட்பம் என்பது எதற்கு பயன்படுகிறது?
போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க
பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காண
இணையதளங்களின் வேகங்களை அதிகரிக்க உதவி செய்ய
            மருத்துவதுறையில் விரைவுல் குணமடைய

விடை: பழைய குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காண ( இது சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது)

8)      ரக்சிதா என்ற திருநங்கை எந்த துறையில் முதல் பட்டம் பெற்றுள்ளார்?
மேலாண்மையியல்
வரலாறு
செவிலியர்
பொருளாதாரம்

விடை: செவிலியர் ( பத்மஸ்ரீ செவிலியர் கல்லூரியில் 4 ஆண்டு படிப்பை நிறைவு செய்தார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர்.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவருக்கு பட்டம் வழங்கப்பட்டது)
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      தற்போது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ள ஜேகே திரிபாதி எந்த நாட்டின் சர்வதேச பதக்கம் பெற்றுள்ளார்?
அமெரிக்கா
பிரிட்டன்
ஸ்காட்லாந்து
பிரான்ஸ்

விடை: ஸ்காட்லாந்து ( 2001 )  ( மேலும் இவர் 108 நாடுகள் பங்கேற்புடன் நடந்த சர்வதேச காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் விருது பெற்றவர். இவர் தமிழக காவல் துறையில் ரோந்து பணிக்காக ‘பீட் ஆபிஸர்’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தி புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்) கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

10)  தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமையகம் எங்கு உள்ளது?
டெல்லி
மும்பை
பெங்களூரு
சென்னை

விடை: பெங்களூரு (ராகுல் டிராவிட் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 19 வயது இந்திய பயிற்சியாளருமாக இருக்கிறார்)


லண்டன் நேச்சர்வேலி சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிரி இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஜெர்மனியின் கெர்பரை வென்றுள்ளார்)

அமெரிக்காவின் எஃப்22 என்ற ரேடார் கண்களுக்கு புலப்படாத விமானங்களை கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.



No comments:

Post a Comment