Sunday 9 June 2019

ஜூன் 10 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 10 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     எந்த மாநிலத்தில் தமிழக பாடப்புத்தகங்களில் உள்ள கியூஆர் கோட் பின்பற்றப்பட உள்ளது?
மகாராஷ்டிரா
உத்திரப்பிரட்தேசம்
உத்தரகாண்ட்
குஜராத்

விடை: உத்திரப்பிரதேசம் ( துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழகத்தில் ஆய்வு செய்து கூறினார்)

2)      பள்ளிக்கல்வித்துறை செயலர் யார்?
அனந்தகிருஷ்ணன்
உதயசந்திரன்
பிரதீப் யாதவ்
ராமகிருஷ்ணன்

விடை: பிரதீப் யாதவ்

3)      தமிழகத்தில் எத்தனை வகையான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்?
32
33
35
36

விடை: 36

4)      ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எந்த இடத்தில் நடைபெற உள்ளது?
தஜிகிஸ்தான்
உஸ்பெஸ்கிதான்
கஜகஸ்தான்
கிர்கிஸ்தான்

விடை: கிர்கிஸ்தான் (பிஸ்கெக்)

5)      கேசரி நாத் திரிபாதி என்பவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவார்?
மத்தியபிரதேசம்
மேற்குவங்கம்
இராஜஸ்தான்
பஞ்சாப்

விடை: மேற்குவங்கம்

6)      தற்போதைய  உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுக்கு பின் பதவியேற்க உள்ள நீதிபதி யார்?
என்.வி.ரமணா
யு.யு.லலித்
எஸ்.ஏ.போப்டே
பி.ஆர்.கவாய்

விடை: எஸ்.ஏ. போப்டே

7)      பெண்களுக்கு எதிராக குற்றநடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணிக்க நிர்பயா படை அமைத்துள்ள மாநிலம் எது?
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரா
உத்திரப்பிரதேசம்
குஜராத்

விடை: மகாராஷ்டிரா (நாசிக் மாவட்டம் 10 பேர் கொண்ட நிர்பயா படை அமைப்பு  மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1091 இலவச தொலைபேசி எண் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது)

8)      பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரபேல் நடால் எத்தனையாவது பட்டம் வென்றுள்ளார்?
10
12
14
16

விடை: 12 ( ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி வெற்றிபெற்றார்)

9)      லகுனா புக்கெட் மாரத்தான் போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்றது?
தாய்லாந்து
இந்தோனேசியா
மியான்மர்
நேபாளம்

விடை: தாய்லாந்து (புக்கெட் நகரில் 14 வது ஆண்டாக நடைபெற்றது. 50 நாடுகளில் இருந்து 13,000 பேர் கலந்து கொண்டனர். சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் 105 மாரத்தான் போட்டியாக கலந்து கொண்டு சாதனை படைத்தார்.

10)  வடகிழக்கு மாநிலங்களில் முதல் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் தேசிய மக்கள கட்சியின் சின்னம் என்ன?
அம்பு
புத்தகம்
சைக்கிள்
யானை

விடை: புத்தகம் (2013 இல் சங்மா இந்த கட்சியை தொடங்கினார்)

11)  கீழடியில் தற்போது எத்தனையாவது கட்ட அகழாய்வு பணி தொடங்குகிறது?
4
5
6
7

விடை: 5

12)  இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொண்டுள்ள எரிக்சன் நிறுவனம் எந்த இடத்தில் தனது சோதனை கட்டமைப்பை நிறுவி உள்ளது?
ஐஐடி காரக்பூர்
ஐஐடி டெல்லி
ஐஐடி சென்னை
ஐஐடி பெங்களூர்

விடை: ஐஐடி டெல்லி (ஜூலை 2018 இல் நிறுவியது. இந்தியாவில்2020 இல் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்திய அரசு இதற்காக 224 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது)


No comments:

Post a Comment