Thursday 13 June 2019

ஜூன் 14 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 14 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      இந்தியாவின் சார்பில் விண்வெளியில் மையம் எந்த் ஆண்டு அமைக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது?
2025
2030
2035
2040

விடை: 2030 ( இது முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 டன் எடை கொண்டதாக இருக்கும். 15 முதல் 20 வீரர்கள் இருக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. தற்போது அமெரிக்கா, இரஷ்யா, சீனா மட்டுமே விண்வெளியில் ஆய்வு மையங்கள் வைத்துள்ளன. இது தவிர அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் வைத்துள்ளது)

2)      எந்த சிறையில் கைதிகளே இயக்கும் பெட்ரோல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
சென்னை
வேலூர்
மதுரை
திருநெல்வேலி

விடை: சென்னை(புழல் சிறை )

3)      தற்போது எத்தனை மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது?
30
31
33
34

விடை: 33 ( மொத்தம் 821 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதில் 788 மருந்துகள் தரம் உறுதி செய்யப்பட்டது.)

4)      பேரிடர் மேலாண்மை அலுவலகம் மற்றும் பயிற்சி நிலையம் எந்த இடத்தில் அமைய உள்ளது?
கோவை
சென்னை
மதுரை
திருச்சி

விடை: சென்னை ( எழிலகம் )

5)      ரகுவர் தாஸ் என்பவர் எந்த மாநிலத்தின் முதல்வர் ஆவார்?
ஜார்க்கண்ட்
மிசோரம்
மேகாலயா
மத்தியப்பிரதேசம்

விடை: ஜார்க்கண்ட் (சர்வதேச யோகா தின விழா 2019 ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஜூன் 21 இல் நடைபெற உள்ளது)

6)      வரிகள் இல்லாத பட்ஜெட் எந்த மாநிலம் தாக்கல் செய்துள்ளது?
மேகாலயா
சிக்கிம்
மிசோரம்
அஸ்ஸாம்

விடை: மிசோரம் ( மொத்த பட்ஜெட் 10,692.30 கோடி)( மிசோ மொழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது) ( இதில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க 159.34 கோடியும் , அதன் செலவுகளுக்காக 371.06 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது)

7)      தம்மினேனின் சீதாராம் என்பவர் எந்த் மாநிலத்தின் சட்டபேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
கர்நாடகா
தெலுங்கானா
ஒரிசா
ஆந்திரா

விடை: ஆந்திரா

8)      சஜித் தாவித் என்பவர் எந்த நாட்டின் உள்துறை செயலர் ஆவார்?
அமெரிக்கா
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
பிரான்ஸ்

விடை: இங்கிலாந்து ( இவர் ஜூலியன் அசாஞ்சேவை அமெர்க்காவுக்கு  நாடு கடத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இறுதி முடிவு நாடளுமன்றம் எடுக்கும்.)

9)      இலங்கையின் புதிய உளவுத்துறை தலைவராக யார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்?
சிலிரா மெண்டிஸ்
ரூவன் குலதுங்கா
பெர்னாண்டஸ்
ரகிந்த குமாரே

விடை: ரூவன் குலதுங்கா ( இதற்கு முன் சிலிரா மெண்டிஸ் இருந்தார். இலங்கை குண்டுவெடிப்புக்கு பிறகு அதிபர் சிறிசேனாவால பதவி நீக்கம் செய்யப்பட்டார்)

10)  சந்தோஷ் ஐயர் என்பவர் எந்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்?
மாருதி
டொயோட்டா
மெர்ஸ்டிஸ்-பென்ஸ்
நிஸ்ஸான்

விடை: மெர்ஸ்டிஸ் – பென்ஸ்

11)  பிரெட்டன் வுட் இரட்டையர்கள் என அழைக்கப்படுபவை எவை?
அ) உலக வங்கி
ஆ) பன்னாட்டு செலாவணி நிதியம்
இ)உலக வர்த்தக நிறுவனம்
ஈ) அ மற்றும் ஆ

விடை: அ மற்றும் ஆ ( அ, ஆ, இ மூன்றும் உலக அளவில் பொருளாதாரத்தை கண்ணாடி போல் காட்டும் நிறுவங்களாக திகழ்கின்றன)

12)  உலக டெஸ்ட் சாம்பியன் சிப் தொடர் இந்த ஆண்டு  எந்த மாதம் தொடங்க உள்ளது?
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்

விடை: ஆகஸ்ட் ( ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியாவும் மேற்கு இந்திய அணியும் மோதுகின்றன. மொத்தம் 9 அணிகள் விளையாடுகின்றன. இதில்  ஒவ்வொரு அணியும் 6 அணிகளுடன் விளையாட உள்ளது. அதிக புள்ளிகள் பெறும் அணி 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றன)





No comments:

Post a Comment