Sunday 30 June 2019

ஜூலை 1 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 1 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      அமெரிக்காவுடன் தலிபான் எத்தனையாவது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது?
1
3
5
7

விடை: 7  ( அமெரிக்க தூதர் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே 7 வது கட்ட பேச்சு வார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கியுள்ளது)

2)      ஜி.எஸ்.டி சட்டம் கொண்டு வந்து தற்போது எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
1
2
3
4

விடை: 2 ( 2 வது ஆண்டு நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற உள்ளது)

3)      எத்தனையாவது தலைமைச் செயலாளராக க.சண்முகம் தற்போது பதவியேற்றுள்ளார்?
40
42
46
49

விடை: 46

4)      டி.சி.எஸ் நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1962
1968
1972
1978

விடை: 1968 ( எஃப்சி கோலி என்பவரால் தொடங்கப்பட்டது. இந்திய மென்பொருள் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆவார். டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டிசிஎஸூக்கு 45 நாடுகளில் 149 இடங்களில் கிளைகள் உள்ளன. பணியாளர்கள் எண்ணிக்கை 4,24,285. வருவாய் 2,090 கோடி. சொத்து மதிப்பு 1,690 கோடி. பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்கள்ல் பட்டியலில் டிசிஎஸ் க்கு 10 ஆவது இடம் பிடித்துள்ளது. 2019 இல் 10 ஆயிரம் கோடி டாலரை தாண்டிய முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற சாதனை படைத்துள்ளது) ( டிசிஎஸ் சந்தை மதிப்பு 8,37,194.55 கோடியாக உயர்ந்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸைக் காட்டிலும் அதிகம் வந்து முதல் இடம் பெற்றது )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      ஜூலை- செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்ட வட்டியை மத்திய அரசு எவ்வளவு சதவீதம் குறைத்துள்ளது?
0.1
1.0
0.5
1.5

விடை:0.1%   ( சிறு சேமிப்புதிட்டம் என்பது பிபிஎஃப் திட்டம், கிஸான் விகாஸ் பத்திரம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி திட்டம், 1-3 ஆண்டு டெபாசிட், 5 ஆண்டு டெபாசிட், தொடர் வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான திட்டம், சேமிப்பு கணக்கு ஆகியவை ஆகும். இதில் சேமிப்பு கணக்கிற்கு மட்டும் 0.1% குறைக்கவில்லை)

6)      ஸ்டக்ஸ்நெட் வைரஸ் என்பது எந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தியது?
வடகொரியா
சீனா
ஈரான்
இரஷ்யா

விடை: ஈரான்  ( ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க அமெரிக்க பயன்படுத்தியது. மத்திய கிழக்கு நாடுகளை உளவுபார்ர்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தயாரித்து பரவவிட்ட வைரஸ் ‘ஃபிளேம் வைரஸ்’.
சில ஆண்டுகளுகு முன்பு சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து தாக்கப்பட்டது ‘ஷமூன் வைரஸ்’.

7)      ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
12
43
74
87

விடை: 74 ( கடந்த ஆண்டு 73 வது இடம். இந்தியா வைத்துள்ள பணத்தின் சதவீதம் 0.07% ஆகும்.  முதல் இடம் பிரிட்டன் (26%). அமெரிக்கா-2, மேற்கிந்திய தீவுகள் 3, பிரான்ஸ் 4, ஹாங்காங் 5, ( முதல் 5 நாடுகள் 50% பங்களிப்பும், முதல் 10 நாடுகள் 75% பங்களிப்பும் கொண்டுள்ளது.  ரஷியா 20, சீனா 22,  பாகிஸ்தான் 82, வங்கதேசம் 89, நேபாளம் 109, இலங்கை 141, மியான்மர் 187, பூடான் 193. இந்திய வாடிக்கையாளர்கள் தொகை 6 சதவீதம் குறைந்து 6,757 கோடியாக உள்ளது. கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.  தற்போதைய ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் மொத்த மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
8)      பான்மூன் ஜோம் எல்லை கிராமம் என்பது எந்த நாட்டில் உள்ளது?
தென்கொரியா
வடகொரியா
ஜப்பான்
வியட்நாம்

விடை: தென்கொரியா ( எல்லைப் பகுதி. அமெரிக்க அதிபர் டிரம்ப்  தென்கொரியா-வடகொரியா எல்லைப் பகுதியான இந்த கிராமத்திற்கு சென்று எல்லை கோட்டை தாண்டி வடகொரியா சென்றார். அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்)

9)      கடலோர காவல்படை இயக்குநராக யார் பதிவியேற்றுள்ளார்?
ராஜேந்திர சிங்
கே.நடராஜன்
சுனில் லம்பா
கரம்வீர் சிங்

விடை: கே.நடராஜன் ( இவர் பாகிஸ்தான் கடல் எல்லையொட்டிய குஜராத் கடற்பகுதி முதல் கேரளா கடற்பகுதிய வரை உள்ள மேற்குபகுதி கடலோர காவல் படை கமாண்டராக இருந்தார். 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பை பலப்படுத்த  கூடுதலாக 20 நிலையங்கள், 2 பிராந்திய கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்)

10)  தமிழ்நாடு வண்ணத்துப்பூச்சி பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
சென்னை
திருச்சி
சேலம்
மதுரை

விடை: திருச்சி ( தற்போது ‘தமிழ் மறவன்’ என்ற வண்ணத்துப்பூச்சி தமிழ்நாடு மாநில வண்ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் சிர்ரோ சாரா தாய்ஸ் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இவை மரவொட்டி தாவரத்தில் முட்டையிட்டு வளரும்.)

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 5 வது இடம் பிடித்துள்ளது.


ஜூன் 30 சர்வதேச சமூக வலைதள நாள்  மற்றும் சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள்

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment