Wednesday 26 June 2019

ஜூன் 27 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 27 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
அரவிந்த் குமார்
சமந்த் குமார் கோயல்
ரமேஷ் அகர்வால்
பிரதீப் சர்மா

விடை: சமந்த் குமார் கோயல் (ஐ.பி.புலனாய்வு பிரிவின் தலைவர் ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தற்போதைய தலைவர் ராஜீன் ஜெயின்.  ‘ரா’ உளவு அமைப்பின் தற்போதைய தலைவர் அனில் கே. தாஸ்மானா.   புதிய தலைவர்கள் இருவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும் )

2)      ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக எத்தனை நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன?
25
35
45
55

விடை: 55 ( ஆசிய – பசுபிக் நாடுகளான 55 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன பாகிஸ்தான் , சீனா உட்பட. இந்த பாதுகாப்பு கவுன்சிலுக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் 5 தற்காலிக உறுப்பினரகள் தேர்வு செய்து அனுப்பி வருகிறது. 2021-2022  உறுப்பினர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து ஐ.நா சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதின் தனது சுட்டுரை பக்கதில் தெரிவித்துள்ளார்) ( இதற்கு முன்பு இந்தியா 7 முறை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக இடம்பெற்றுள்ளது)

3)      இந்தியாவில் எத்தனை மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக நோய்கள் மற்றும் நிதிசார் நடவடிக்கைகளுக்கன தரவு மையம் ( அமெரிக்கா ) தெரிவித்துள்ளது?
2 லட்சம்
4 லட்சம்
6 லட்சம்
8 லட்சம்

விடை: 6 லட்சம் ( உலக சுகாதார அமைப்பு விதிப்படி ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதேபோல் 483 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்பதும் விதிமுறை ஆகும்.  ஆனால் இந்தியாவில் 10,189 பேருக்கு ஒருவர் என்ற விகித்ததில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் போதிய அளவு மருத்துவர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் 1:253; தில்லி 1:334; கர்நாடகம் 1:507; கேரளம் 1:535; கோவா 1:713 )
 நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
4)      தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
எம். ராமகிருஷ்ணான்
எஸ்.சத்தியமூர்த்தி
கே.சீனிவாசன்
பி.சுப்பிரமணியம்

விடை: கே.சீனிவாசன் ( இதனை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யாபிரத சாகு தெரிவித்துள்ளார். கே.சீனவாசன் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் ஆவார். இவருக்கு உதவியாக சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் பி.சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது.)

5)      கீழடியில் கண்டுபிடிக்கப்படும் ஆய்வு பொருள்களின் தொன்மையை ஆய்வு செய்ய எந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது?
1.சென்னை ஐஐடி
2.மும்பை ஐஐடி
3.கான்பூர் ஐஐடி
4.  1 மற்றும் 2

விடை: 1 மற்றும் 2

6)      குடிநீர் பஞ்சம் நிலவும் மாவட்டங்களில் எத்தனை உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
225
250
275
300

விடை: 225 ( இந்த நியமனம் ‘ஜல சக்தி அபியான் மூலம் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்பட உள்ளது. சில குறிப்பிட்ட மாநிலங்களில் நவம்பர் வரை இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

7)      ஜி-4 நாடுகளி பட்டியலில் இல்லாத நாடு எது?
இந்தியா
ஜப்பான்
பிரேசில்
பிரான்ஸ்

விடை: பிரான்ஸ்  (இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி )

 நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      தற்போது இடிக்கப்பட்டுள்ள பிரஜா வேதிகா என்ற கட்டடம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
கர்நாடகா
ஆந்திரா
தெலுங்கானா
மகாராஷ்டிரா

விடை: ஆந்திரா ( முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பெயரில் கட்டப்பட்ட அந்த கட்டடம் சட்டவிரோதமானது என கூறி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான தற்போதைய அரசு இடித்துள்ளது )

9)      சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் தற்போது 9,778 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள ஸ்டெர்லிங்க் பயோடெக் நிறுவனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
மகாராஷ்டிரா
கேரளா
குஜராத்
கர்நாடகா

விடை: குஜராத் ( இந்த நிறுவனம் ஆந்திர வங்கி தலைமையிலான கூட்டமைப்பிடம் 5000 கோடி ரூபாய் கடன் வாங்கி அதன் மூலம் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளது. இது மட்டும் இல்லாமல் மொத்தம் 8,100 கோடி அளவில் மோசடி செய்துள்ள இந்த நிறுவனத்தின் மீது 9,778 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது )

10)  பிங்கத்தான் என்ற யாருக்கான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டப் போட்டி ஆகும்?
குழந்தைகள்
முதியவர்கள்
பெண்கள்
இளைஞர்கள்

விடை: பெண்கள் (இதன் 6 ஆவது சீசன் வரும் ஆகஸ்ட் 4 சென்னை தீவுத்திடலில் நடைப்பெற உள்ளது )



இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான் நரிந்தர் பத்ரா என்பவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெயிர் பொல்சொனாரோ பிரேசில் அதிபர் ஆவார். இவர் கொண்டு வந்து இருந்த துப்பாக்கி கட்டுப்பாட்டை தளர்த்தும் உத்தரவை வாபஸ் பெற்றுள்ளார். இவர் கருத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து ஆராய்ந்து வந்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார்.


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment