Friday 7 June 2019

ஜூன் 8 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 8 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     ஆந்திர மாநிலத்தில் இன்று பதவியேற்க உள்ள அமைச்சரவயில் எத்தனை துணை முதலமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்?
2
3
4
5

விடை: 5 (ஆந்திர மாநிலத்தின் ஆளுநர் நரசிம்மன். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி). மொத்த அமைச்சர்கள் 25. அதில் 5 பேர் துணை முதலமைச்சர்கள். சட்டபேரவை தொகுதிகள் 175. ஒய்எஸ்ஆர் கட்சி வென்ற இடங்கள் 151. நாடாளுமன்ற தொகுதியில் 25 இல் 22 தொகுதி வெற்றி ஆகும்)

2)      தேசிய பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு அமர்வு மொத்தம் எத்தனை இடங்களில் கூட உள்ளது?
707
717
727
737

விடை: 727 (பத்து மாவட்டங்களுக்கு ஒரு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான அமர்வு ஜூன் 21 இல் முதல் அமர்வு 10 மாவட்டங்களுக்கு கூடுகிறது/)

3)      தற்போது “இ-சலான்” என்ற கருவி மற்றும் “ஜிசிடிபி சிட்டிசன் சர்வீஸ்” செயலி எதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது?
வருமான வரி கண்காணிக்க
வருமான வரி செலுத்த
விவசாய கடன் வழங்க
போக்குவரத்து விதிமீறலை ஆராய மற்றும் அபராதம் விதிக்க

விடை: போக்குவரத்து விதிமீறலை ஆராய மற்றும் அபராதம் விதிக்க

4)      லோடெ ஷெரிங்க் என்பவர் எந்த நாட்டின் பிரதமர் ஆவார்?
நேபாளம்
பூடான்
திபெத்
மியான்மர்

விடை: பூடான் ( அந்த நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தண்டி டோர்ஜி)

5)      மாநிலங்களுக்கு இடையேயான மன்றம் (ஐ எஸ் சி ) அரசியலமைப்பின் எந்த பிரிவின் கீழ் இயற்றப்பட்டது?
261
263
265
267

விடை: 263

6)      பாலகோட் குண்டுகள் என்பது எதை குறிக்கிறது?
ஸ்பைஸ் 1000
ஸ்பைஸ் 1500
ஸ்பைஸ் 2000
ஸ்பைஸ் 2500


விடை: ஸ்பைஸ் 2000 குண்டுகள் ( இது இஸ்ரேலின் பொதுத்துறை நிறுவனமான “ரஃபேல் அட்வான்ஸ்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிட்டெட்” நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குண்டுகள் ஆகும். இதை பாலகோட் துல்லிய தாக்குதலுக்கு பயன்படுத்தியதால் பாலகோட் குண்டுகள் என அழைக்கபடுகிறது. இந்த வகை குண்டுகள் தற்போது ரூ.300 கோடி மதிப்பில் 100 பாலகோட் குண்டுகள் வாங்க ஒப்பந்தம்.

7)      போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பெண் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமெரிக்க பெண்களின் எண்ணிக்கை?
1
2
3
4

விடை: 3 (1. ஜெயஸ்ரீ உல்லான் (அரிஸ்டா நெட் நிறுவனம் – 18 வது இடம், 140 கோடி டாலர் ஆகும். 2. நீரஜா சேத்தி (சின்டெல் நிறுவனம்)  - 23 வது இடம் 100 கோடி டாலர், 3.நேஹா நர்கடே ( ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனம் 60 வது இடம் – 36 கோடி டாலர் ஆகும்)  இந்த பட்டியலில் செரினா வில்லியம்ஸ் 80 வது இடத்தில் உள்ளார்.


8)      பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தின வர்த்தக மதிப்பு எவ்வளவு?
20000 கோடி
40000 கோடி
60000 கோடி
80000 கோடி

விடை: 40000 கோடி . ( 1998 இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்ஓபி மஷினோஸ்ட்ரோனியா நிறுவனத்துடன் இணைந்து 1300 கோடி செலவில் தொடங்கப்பட்டது. தற்போது வரை இந்தியா நேரடி மற்றும் மறைமுக வரியாக ரூ.4000 கோடி செலவழித்துள்ளது.)

9)      பிரதீப் குமார் சின்ஹா என்பவர் எதன் செயலாளராக 3 மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார்?
மத்திய வெளியுறவு துறை
மத்திய உள்துறை
மத்திய பாதுகாப்பு துறை
மத்திய அமைச்சரவை

விடை: மத்திய அமைச்சரவை( மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முடிவு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு பதவிக்காலம் 3 மாதம் நீட்டித்துள்ளது.

10)  உலக கடல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படும் நாள்?
ஜூன் 6
ஜூன் 8
ஜூன் 10
ஜூன் 12

விடை: ஜூன் 8 ( 1992 பிரேசிலில் நடைப்பெற்ற புவி உச்சி மாநாட்டில் கடைப்பிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. கடலை பூமியின் நுரையீரல் என ஐ.நா அறிவித்துள்ளது)

11)  ஷா முகமது குரேஷி என்பவர் எந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்?
பாகிஸ்தான்
வங்கதேசம்
இலங்கை
ஈரான்

விடை: பாகிஸ்தான்

12)  கோதாவரி – பெண்ணாறு நதிகளை இணைக்கும் எந்த மாநில அரசின் திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது?   
கர்நாடகா
ஆந்திரா
தெலுங்கானா
மஹாராஷ்டிரா

விடை: ஆந்திரா ( காரணம்:  நீர் மாசுப்பாட்டுச் சட்டம் 1974 , காற்று மாசுபாட்டுச் சட்டம் 1981 விதிகள் படி அனுமதி பெறாத காரணத்தால்)



No comments:

Post a Comment