Sunday 16 June 2019

ஜூன் 17 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 17 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த நாட்டிடம் இருந்து நவீன தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட உள்ளன?
ஜெர்மனி
அமெரிக்கா
சீனா
பிரிட்டன்

விடை: அமெரிக்கா ( இந்த கருவி மூலம் அதிநவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை அளிக்கும் ட்ரூ பீம் ரேடியேஷன் தெரபி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை  அரசு மருத்துவமனை ஆகியவற்றில் நிறுவப்பட உள்ளன. இந்த மையங்கள் சென்னை தவிர கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் அந்த மையங்கள் அமைய உள்ளன)

2)     தற்போது ஜெனிவாவில் எத்தனையாவது உலக வானிலை காங்கிரஸ் மாநாடு நடைப்பெற்றது?
14
16
18
20

விடை: 18

3)      நெகிழி பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு எந்த நாள் முதல் அபராதம் அமல்படுத்தப்பட உள்ளது?
ஜூன் 17
ஜூன் 19
ஜூலை 1
ஆகஸ்ட் 15

விடை: ஜூன் 17

உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நமது கல் விரகு ( கல்வி தந்திரம் ) சேனல் காணொளிகள் மற்றும் பிளாக்ஸ்பாட் தளங்களை பகிரவும்

4)      சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி 11,000 ரன்களை எத்தனையாவது போட்டியில் கடந்து சாதனை படைத்துள்ளார்?
222
276
284
298

விடை: 222 ( சச்சின் டெண்டுல்கர் 276 வது இன்னிங்ஸ்களில் இந்த சாதனை படைத்தார். இந்த சாதனையை படைத்த 3 வது இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 9 வது வீரர் ஆவார்)

5)      உலக வில்வித்தை போட்டி தற்போது எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது?
இந்தோனேசியா
இரஷ்யா
தாய்லாந்து
நெதர்லாந்து

விடை: நெதர்லாந்து  ( டென்பாஸ்ச் நகரில் நடைபெற்று வருகிறது)

6)      ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா எத்தனையாவது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்?
13
15
17
19

விடை: 17  ( இதற்கு முன் புவனேஸ்வரி குமாரி 16 முறை சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது.)

7)      பயாஸ் ஹமீது என்பவர் தற்போது எந்த் நாட்டின் உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
வங்கதேசம்
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
தஜிகிஸ்தான்

விடை: பாகிஸ்தான் (பாகிஸ்தான் உளவு அமைப்பு பெயர் ஐஎஸ்ஐ ஆகும். இதற்கு முன் இதன் தலைவராக இருந்த ஆஸிம் முனீர். அதற்கு முன்  நவீத் முக்தார் இருந்தார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடுத்த அதிகாரம் மிக்க அமைப்பாக இது திகழ்கிறது)

உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நமது கல் விரகு ( கல்வி தந்திரம் ) சேனல் காணொளிகள் மற்றும் பிளாக்ஸ்பாட் தளங்களை பகிரவும்

8)      தற்போது எந்த நாட்டில் உள்ள கிராமத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
துருக்கி
இஸ்ரேல்
சவுதி அரேபியா
பாகிஸ்தான்

விடை: இஸ்ரேல் (கோலன் ஹட்ஸ் என்ற யூதர்கள் குடியிருக்கும் கிராமத்திற்கு ‘ரமத் டிரம்ப்’ அல்லது ‘டிரம்ப் ஹைட்ஸ்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது)

9)      மிஸ் இந்தியா 2019 பட்டம் வென்ற சுமன் ராவ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
மகாராஷ்டிரா
பஞ்சாப்
ஹரியானா
இராஜஸ்தான்

விடை: இராஜஸ்தான் ( கடந்த ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அனு கீர்த்தி வாஸ் மகுடம் சூட்டினார் . இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் இந்த ஆண்டு டிசம்பரில் நடக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்பார். இரண்டாம் இடம் சத்திஷ்கரைச் சேர்ந்த ஷிவானி ஜாதவ், மூன்றாம் இடம் பீகாரைச் சேர்ந்த ஷ்ரேயா சங்கர்  பிடித்துள்ளனர்)

10)  பிரகலாத் ஜோஷ் என்பவர் எந்த துறையின் அமைச்சராக உள்ளார்?
தொழில் துறை
விளையாட்டு துறை
நாடாளுமன்ற விவகாரத் துறை
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை

விடை: நாடாளுமன்ற விவகாரத்துறை

11)  ஆசியாவில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் நம்பிக்கை உருவாக்கும் கூட்டமைப்பு (சிஐசிஏ) மாநாடு எந்த நாட்டில் நடைப்பெற்றது?
கிர்கிஸ்தான்
கஜகஸ்தான்
தஜிகிஸ்தான்
உஸ்பெஸ்கிஸ்தான்

விடை: தஜிகிஸ்தான் ( தலைநகர் துஷான்பேவில் நடைபெற்றது. இந்த அமைப்பு 1999 இல் தொடங்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தன், சீனா, வங்கதேசம், ரஷ்யா, இஸ்ரேல் உட்பட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த அமிப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002 இல் இந்தியா உறுப்பினராக இணைந்தது)

12)  உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரங்கள் குவித்த வீரர்  என்ற பெருமையை பெற்ற வீரர் யார்?
விராட் கோலி
ரோஹித் சர்மா
எம் எஸ் தோனி
கே எல் ராகுல்

விடை: ரோஹித் சர்மா ( பாகிஸ்தானுக்கு எதிராக 2 வது சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னாதாக 2015 உலககோப்பையில் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து இருந்தார்)

உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நமது கல் விரகு ( கல்வி தந்திரம் ) சேனல் காணொளிகள் மற்றும் பிளாக்ஸ்பாட் தளங்களை பகிரவும்

No comments:

Post a Comment