Sunday 23 June 2019

ஜூன் 24 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 24 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     எந்த நாட்டின் மீது அமெரிக்க சைபர் தாக்குதலை தொடுத்துள்ளது?
பாகிஸ்தான்
எத்தியோப்பியா
வடகொரியா
ஈரான்

விடை ஈரான் ( ஜூன் 24 முதல் கடுமையான பொருளாதார தடையும் விதித்துள்ளது. சைபர் தாக்குதல் மூலம் அந்த நாட்டை அணு ஆயுத திட்டங்கள் மற்றும் அந்நாட்டின் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது)

2)     கமால் கர்சாய் என்பவர் எந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்?
ஆப்கானிஸ்தான்
இஸ்ரேல்
ஈரான்
பாகிஸ்தான்

விடை: ஈரான் ( இவரை பிரிட்டனின் மத்திய மற்றும் கிழக்கு நாடுகள் இடையேயான வெளியுறவுத்துறை துணையமைச்சர் சந்தித்து அமெரிக்க மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது)

3)     எந்த நாடு வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அறிக்கையை இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது?
சீனா
அமெரிக்கா
பாகிஸ்தான்
வடகொரியா

விடை: அமெரிக்கா ( மதச்சுதந்திரம் இன்றி இந்திய சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் இந்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் அரசு சட்டம் சமத்துவம் போல் எந்த நாட்டிலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

4)      தெற்கு இரயில்வேயின் கீழ் எத்தனை கோட்டங்கள் உள்ளன?
2
4
6
8

விடை: 6 ( சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு) (இரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு மானியத்தை விட்டு தரும் சட்டம் 2016 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயணசீட்டு பதிவு செய்யும் போதூ 50 % அல்லது முழுமையான சலுகையை இரத்து செய்யலாம். இந்த திட்டத்தை ஆகஸ்டு 31 க்குள் செயல்படுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது)  (மானியம் இல்லாத கட்டணமானது வழக்கமான கட்டணத்தை விட 47% அதிகமாக இருக்கும் )

5)      ஜூன் 23 இல் சாந்தி மலர் என்பவர் எந்த மருத்துவக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்?
ஸ்டான்லி
ஓமந்தூரார்
வேலூர்
சிவகங்கை

விடை: ஸ்டான்லி  ( மயக்கவியல் நிபுணர் ஆவார் )  ( இதற்கு முன் எஸ். பொன்னம்பல நமசிவாயம் என்பவர் மே 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார் )

6)      ஹைபோகிளைசிமியா ( மூளைக் காய்ச்சல்  அல்லது மூளை அழற்சி காய்ச்சல்) நோயால் எந்த மாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்?
உத்திரப்பிரதேசம்
ஜார்க்கன்ட்
பீகார்
மத்தியப்பிரதேசம்

விடை: பீகார் ( குழந்தைகள் இறப்பிற்கு முக்கிய இரண்டு காரணங்கள் ஊட்டச்சத்து இல்லாமை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாமை. அங்குள்ள முசாபூர் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய் லிச்சி பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படுவதாக இந்திய – அமெரிக்க மருத்துவக்குழு ஒன்று ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது. இந பழங்களை சாப்பிட்டு இரவு உணவு அருந்தாமல் உள்ள ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் “ மெதிலின் சைக்லோபுரோபைல் கிளைசின் (Methylene cyclopropyl glycine)  என்ற நச்சுப்பொருள் தாக்கி இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த  நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன் டெக்ஸ்ட்ரோஸ் என்ற மருந்து கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்றலாம் என கூறப்பட்டுள்ளது)

7)      பிஎன்எஸ் சாத் என்பது எந்த நாட்டு ஆகும்?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
கனடா
பாகிஸ்தான்

விடை: பாகிஸ்தான்  ( அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல் )

8)      இரயில்வேயில் 30 ஆண்டு பணி அல்லது 56 வயது நிறைவுவான திறன் இல்லாதவர்களுக்கு எந்த சட்டபடி கட்டாய ஓய்வு அளிக்கப்பட உள்ளது?
1972 பிரிவு 56 (ஏ)
1972 பிரிவு 56 (இ)
1972 பிரிவு 56 (ஜெ)
1972 பிரிவு 56 (கே)

விடை: 1972 பிரிவு 56 (ஜெ) ( நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கை)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

9)      எப்ஐஎச் மகளிர் ஹாக்கி பிரிவில் எந்த நாடு பட்டம் வென்றுள்ளது?
இந்தியா
ஜப்பான்
மலேசியா
நியூசிலாந்து

விடை: இந்தியா ( இதன் மூலம் இந்தியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது) ( ஆட்ட நாயகி ராணி, அதிக கோலடித்தவர் குர்ஜித் கௌர்)

10)  ஹாலே ஓபன் போட்டியில் பெடரர் எத்தனையாவது முறையாக வென்றுள்ளார்?
5
10
15
20

விடை: 10 ( டேவிட் கோபினை வென்று பட்டம் பெற்றார் )

11)  அபிந்தன் 151 என்ற பிரிப்பெய்டு பிளானை எந்த செல்பேசி நிறுவனம் கொடுத்துள்ளது?
ஜியோ
பிஎஸ்என்எல்
ஏர்டெல்
வோடோபோன்

விடை: பிஎஸ்என்எல்

12)  தற்போது எந்த நாட்டில் ராணுவதளபதியும், ஒரு மாகாண ஆளுநரும் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டதால் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது?
லிபியா
எத்தியோப்பியா
ஜிம்பாவே
காங்கோ

                   விடை: எத்தியோப்பியா ( இதன் தலைநகர் அடி அபாபா ) ( பிரதமர் அபிய்                                 அகமது ) ( இறந்தவர்கள்: ராணுவ தளபதி சியாரே மெகோனென் மற்றும்                                   அம்ஹாரா மாகாண முதல்வர் அம்பாச்யூ ) 

                  நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை                               தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து                       நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது                           கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள்                                   நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

No comments:

Post a Comment