Friday 21 June 2019

ஜூன் 22 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 22 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      முத்தலாக் தடை சட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த ரவிசங்கர் எந்த துறையில் அமைச்சராக உள்ளார்?
தொழில்துறை
குழந்தைகள் நலத்துறை
சட்டத்துறை
சுற்றுச்சூழல் துறை

விடை: சட்டத்துறை ( இதற்கான தடையினை உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு விதித்தது)

2)      ஜூன் 21, 2019 ( நேற்று) இல் உலகம் முழ நடைபெற்ற யோகாதினம் எத்தனையாவது ஆண்டாக கொண்டாடப்படுகிறது?
1
3
5
7

விடை: 5 (ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் பிரபத்  தாரா மைதானத்தில் நடைபெற்றது)

3)      ஆகஸ்ட் 1 முதல் எந்த மாநிலத்தில் நெகிழிக்கு தடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
கர்நாடகா
புதுச்சேரி
கேரளா
ஆந்திரா

விடை: புதுச்சேரி ( புதுச்சேரி சுற்றுச்சூழல் அமைச்சர் மு.கந்தசாமி )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

4)      எந்த இடத்தில் இசைக்காக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
கும்பகோணம்
தாராசுரம்
தஞ்சை பெரியகோயில்
திருவையாறு

விடை: திருவையாறு ( ஜூன் 21 இல் இசை தினத்தை முன்னிட்டும், படைப்பாற்றல் மிக்க நகரமாக சென்னை மாநகரை யுனெஸ்கோ அறிவித்தை முன்னிட்டும் ‘சென்னையில் இசை விழா’ என்ற நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது) ( இசைப் பல்கைலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி)

5)      இணைய குற்றங்களால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1
3
5
7

விடை: 5 ( ஜூன் 21 தேசிய இணைய பாதுகாப்பு குறித்த மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது)

6)      2014 இல் தேர்தல் முறைகளுக்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெற்ற  போராட்டம் எவ்வ்வாறு அழைக்கப்படுகிறது?
பீப்பிள் மூவ்மெண்ட்
அம்பர்லா மூவ்மெண்ட்
ரிபப்ளிக் மூவ்மெண்ட்
பிரீடம் மூவ்மெண்ட்

விடை: அம்பர்லா மூவ்மெண்ட்

7)      அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பு  ( என்எஸ்ஜி ) மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
கஜகஸ்தான்
கத்தார்
சீனா
இரஷ்யா

விடை: கஜகஸ்தான் ( அஸ்தானா )

8)      ஜி.எஸ்.டி கவுன்சிலின் 35 வது கூட்டம் எந்த மாநிலத்தில் நடந்தது?
பஞ்சாப்
ஹரியானா
உத்தர்கண்ட்
டெல்லி

விடை: டெல்லி ( விஞ்ஞான் பவனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது )

9)      ஜி 20 மாநாடு 2019 எந்த நாட்டில் நடைபெறுகிறது?
பிரான்ஸ்
ஜப்பான்
இரஷ்யா
ஜெர்மனி

விடை: ஜப்பான் ( ஒசாகா நகர் ) ( 14 வது மாநாடு) (ஜி 20 நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உலக ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் 85% ஆக உள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

10)  பயங்கரவாத நிதியுதவி தடுப்பு கண்காணிப்பு அமைப்பு ( எஃப் ஏ டி எஃப் ) எந்த நாட்டில் செய்லபட்டு வருகிறது?
இரஷ்யா
பிரான்ஸ்
நியூயார்க்
ஜெனிவா

விடை: பிரான்ஸ் ( பாரிஸ் ) ( அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஓர்லாண்டாவில் ஜூன் 21 இல் நடைபெற்றது. இதன் பின் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பதிலும் சட்டவிரோத பரிவர்த்தனை கையாள்வதில் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. வரும் அக்டோபருக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அந்த நாடு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது)

11)  பாகிரதா திட்டம் என்பது எந்த மாநிலம் செயல்படுத்திவருகிறது?
ஆந்திரா
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா

விடை: தெலுங்கானா ( இந்த திட்டம் குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டமாகும்)

12)  ஆளில்லா ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ள நாடு எது?
சீனா
இரஷ்யா
இஸ்ரேல்
அமெரிக்கா

விடை: சீனா (  ஏவி 500 என பெயரிடப்பட்ட அந்த ஹெலிகாப்டர் ஹைனன் மாகாணத்தில் இயக்கி பார்க்கப்பட்டது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

4 comments: