Thursday 6 June 2019

ஜூன் 7 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 7 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     பிற வங்கி ஏடிஎம் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணத்தை  முறைப்படுத்துவதற்கான குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
எம்.சங்கர்
சக்திகாந்த தாஸ்
வி.ஜி.கண்ணன்
கே.ரமேஷ் அகர்வால்

விடை: வி.ஜி.கண்ணன் ( இந்திய வங்கிகள் சங்கத்தின் சிஇஓ)

2)      சுனில் பாலிவால் என்பவர் எந்த துறையின் செயலாள்ராக உள்ளார்?
உள்துறை
தொழிலாளர் துறை
சுகாதாரத்துறை
போக்குவரத்துதுறை

விடை: தொழிலாளர் துறை

3)      தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 8 குழுக்களிலும் இடம் பெற்றுள்ளவர் யார்?
ராஜ்நாத் சிங்
நிர்மலா சீதாராமன்
அமித் ஷா
பியூஸ் கோயல்

விடை: அமித் ஷா

4)      இதயநோய் வல்லுநர்கள் மாநாடு முதல் முறையாக எங்கு நடைபெற உள்ளது?
டெல்லி
சென்னை
மும்பை
கொல்கத்தா

விடை: சென்னை ( 400 க்கும் மேற்பட்டோர் கல்ந்து கொள்கின்றனர்)

5)      ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எத்தனை சதவீதம் குறைத்துள்ளது?
0.15
0.25
0.50
0.75

விடை: 0.25% ( கடந்த 9 ஆண்டுகளில் குறைந்த அளவாகும்)

6)      ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
உஸ்பெஸ்கிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
கிர்கிஸ்தான்
உக்ரைன்

விடை: கிர்கிஸ்தான் (தலைநகர் பிஷ்கெக்கில் ஜூன் 13, 14 இல் நடக்கிறது )

7)      வாகனங்களுக்கான பி.எஸ். 6 விதிமுறைகள் எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றன?
2019
2020
2021
2022

விடை: 2020

8)      மார்ஷல் தீவுகளுடன் இந்தியா எதற்கான விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது?
தொழில் துறை விவரங்கள்
ஆராய்ச்சி துறை
வங்கி நடவடிக்கைகள் மற்றும் வரிகள்
விவசாய துறை

விடை: வங்கி நடவடிக்கைகள் மற்றும் வரிகள் ( இந்த ஒப்பந்தம் 2016 இல் மேற்கொள்ளப்பட்டது. மார்ஷல் தீவு பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ளது)

9)      எந்த மாநிலத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள மறுபடியும் அனுமதி அளித்துள்ளது?
கர்நாடகா
ஆந்திரா
தெலுங்கானா
குஜராத

விடை: ஆந்திரா (தில்லி சிறப்பு காவல்துறை அமைப்பு சட்டத்தின் 6 வது பிரிவின் படி மாநிலங்களில் சிபிஐ செயல்பாட்டை மாநில அரசு சேர்க்க மற்றும் நீக்கலாம்)

10)  12 வது மேயர் செஸ் சர்வதேச போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
இந்தியா
சீனா
இலங்கை
இந்தோனேசியா

விடை: இந்தியா ( மும்பயில் ஜூன் 9-16 வரை நடைபெறுகிறது. 23 நாடுகள் 225 வீரர்கள்  கல்ந்து கொள்ள உள்ளனர்)

11)  இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களை வென்றதன் 75 ஆம் ஆண்டு விழா எங்கு நடைப்பெற்றது?
அமெரிக்கா
இரஷ்யா
இங்கிலாந்து
பிரான்ஸ்

விடை: பிரான்ஸ் ( நார்மான்டி மாகாணம் , கொலவில் சுர்மர் பகுதியில் உள்ள அமெரிக்க போர் நினைவகத்தில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டனர்)

12)  பெண்கள் அதிகம் உள்ள அமைச்சரவை என்ற சிறப்பு எந்த நாடு பெறுகிறது?
கிரீன்லாந்து
சுவிட்சர்லாந்து
பின்லாந்து
அயர்லாந்து

விடை: பின்லாந்து ( தலைநகர் ஹெல்சிங் வடக்கு ஐரோப்பிய நாடு ஆகும். ஏப்ரல் 14 இல் நடந்த தேர்தலில் சோஷலிச ஜனநாயக கட்சி அதிக இடங்களைல் பெற்றது. மிதவாத கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. பிரதமராக சோஷலிச ஜனநாயக கட்சி தலைவர் அன்ட்டி ரின்னி  பதவியேற்றார். இந்த கட்சி 16 ஆண்டுகள் கழித்து ஆட்சியமைக்கிறது. இங்குள்ள அமைச்சரவையில் மொத்த இடங்களான 19 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.)


No comments:

Post a Comment