Wednesday 19 June 2019

ஜூலை 20 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 20 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     தற்போது தொல்பொருள்கள் கண்காட்சிகள் கண்காட்சி நடைபெற்று வரும் நாங்கூர் என்பது எந்த மாவட்டத்தில் உள்ளது?
சிவகங்கை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
கும்பகோணம்

விடை: நாகப்பட்டினம்

2)     பத்திரிக்கையாளர் கஷோகி படுகொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு உள்ளதாக கூறியுள்ள ஆக்னஸ் கலாமர்ட் ஐ.நாவில் எந்த பதவியில் உள்ளார்?
மனித உரிமை தலைவரி
பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்
சிறப்பு கண்காணிப்பு அதிகாரி
பொதுச்சபை துணைத்தலைவர்

விடை: சிறப்பு கண்காணிப்பு அதிகாரி

3)     வருவாயைப் பெருக்குவதில் இந்திய அளவில் தமிழக அஞ்சல் துறை எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1
2
3
4

விடை: 3 ( தமிழக வட்ட அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத். இரண்டாவது இடத்தை அடைய இலக்கு 40 கோடி மட்டுமே. தமிழக அஞ்சல் துறை 2018-19 ஆம் ஆண்டில்  1263 கோடி வருவாய் ஈட்டியுள்ளது)

4)      சொற்குவைத் திட்டம் எந்த தினம் தொடங்கி வைக்கப்பட உள்ளது?
ஜூலை 1
ஜூலை 3
ஜூலை 5
ஜூலை 7

விடை: ஜூலை 5, 2019 ( அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற உள்ள உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், விளையாட்டு என பலதுறை சார்ந்த சொற்களை தமிழில்  அறிய, தமிழ் சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டம் பயன்படும்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

5)      உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1
2
3
4

விடை: 2 ( தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பலகலைக் கழகம் மற்றும் உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு சங்கத்தில் ஆசிய தொகுப்பு சார்பில் “ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு -2019 “ என்னும் 3 நாள் கருத்தரங்கு ஜூன் 19 முதல் சென்னை வர்த்த்க மையத்தில் தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதை தெரிவித்தார்)

6)      உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் எது முன்னனனியில் உள்ளது?
சென்னை ஐஐடி
பெங்களூர்  இந்திய அறிவியல் கழகம்
தில்லி ஐஐடி
மும்பை ஐஐடி

விடை: மும்பை ஐஐடி(152) (2- டெல்லி ஐஐடி(172) 3-பெங்களூர் இந்திய அறிவியல் கழகம்) ( 4 வது இடம் சென்னை ஐஐடி (271))

7)      நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் எந்த் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
தெலுங்கானா
ஹிமாச்சலபிரதேசம்
மத்தியபிரதேசம்
உத்திரப்பிரதேசம்

விடை: ஹிமாச்சலப்பிரதேசம்

8)      ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?
கஜகஸ்தான்
தஜிகிஸ்தான்
இரஷ்யா
சீனா

விடை: இரஷ்யா ( சோச்சி) ( ஜூன் 18 இல் நடைப்பெற்றது. இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பங்கேற்றார்)

9)      ராவணா 1 என்ற செயற்கைக்கோளை எந்த நாடு செலுத்தி உள்ளது?
வங்கதேசம்
இந்தியா
இலங்கை
நேபாளம்

விடை: இலங்கை (இலங்கையின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.  இது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இது அமெரிக்காவின் சிக்னஸ்1 என்ற விண்வெளி ஓடம் மூலம் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனுடன் ஜப்பான் (2)மற்றும் நேபாளம்(1) செயற்கைக்கோள்களும் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த செயற்கைக்கோள்களூம் சேர்து விண்ணில் செலுத்தப்பட்டது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

10)  வெள்ளை கண்டம் என அழைக்கப்படுவது?
ஆஸ்திரேலியா
ஆசியா
ஆர்டிக்
அண்டார்டிக்

விடை: அண்டார்டிக் ( 98% பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது)(வெப்பநிலை   - 69 டிகிரி செல்சியஸ்) ( இங்கு இந்தியா 3 ஆய்வு மையங்களை நிறுவியுள்ளது)


4 comments: