Monday 10 June 2019

ஜூன் 11 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 11 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      திரவுபதி முர்மு எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவார்?
மேற்குவங்கம்
ஜார்க்கண்ட்
மிசோரம்
மேகாலயா

விடை: ஜார்க்கண்ட் (மேற்குவங்கம் கேசரி நாத் திரிபாதி, அருணாசலபிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா)

2)      அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் எவ்வளவு?
5.1 பில்லியன் டாலர்
5.2 பில்லியன் டாலர்
4.7 பில்லியன் டாலர்
4.2 பில்லியன் டாலர்

விடை: 5.1 பில்லியன் டாலர் ( இதில் கூகுள் நிறுவன செய்தி வருவாய் மட்டும் 4.7 பில்லியன்(37,000 கோடி ரூபாய்) அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் டேவிட் சாவெர்ன்

3)      குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்ப்படும் நாள் எது?
ஜூன் 11
ஜூன் 12
ஜூன் 13
ஜூன் 14

விடை: ஜூன் 12  (யுனிசெஃப் 5-14 வயது வரை உள்ள குழந்தைகள் வாரத்துக்கு 28 மணிநேரத்திற்கு அதிகமாகவோ அல்லது 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு வாரத்துக்கு 42 மணிநேரத்திற்கு அதிகமாகவோ உழைத்தால் குழந்தை தொழிலாளர் என அழைக்கப்படுகிறாரகள். 2011 கணக்கெடுப்பு படி இந்தியாவில் 1கோடி பத்துலட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாகவும், உத்திரப்பிரதேசத்தில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது)
(இந்தியாவில் குழந்தை தொழிலாளர் ஆணையம் 1979 இல் அமைக்கப்பட்டது. 1986இல் குழந்தை தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது)

4)      சமீர் டெலாட் என்பவர் எந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்?
இந்தியா புல்ஸ் ஹவுசிங்க் பைனான்ஸ்
லட்சுமி விலாஸ் வங்கி
ஐடிசி நிறுவனம்
விப்ரோ

விடை: இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் (98,000கோடி மோசடி என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது)

5)      ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?
இஸ்ரேல்
அமெரிக்கா
பிரான்ஸ்
பிரிட்டன்

விடை: பிரான்ஸ் (பியாரீட்ஸ் நகரில் ஆகஸ்ட் 24, 25 இல் 45 ஆவது உச்சிமாநாடு நடைபெறுகிறது)  (ஜி 7 அமைப்பின் நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி)

6)      கிரிகிஸ்தானில் ஜூன் 13,14 இல் நடைபெற உள்ள ஷாங்காய் அமைப்பின் எத்தனையாவது உச்சி மாநாடு ஆகும்?
13
15
17
19

விடை: 19 (கிரிகிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெறுகிறது)

7)      தற்போது மறைந்துள்ள கிரீஷ் கார்னாட் எந்த ஆண்டு ஞானபீட விருது பெற்றார்?
1996
1997
1998
1999

விடை: 1998

8)      பருவநிலை மாற்றத்தால் உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக்கப்படு இருப்பதாக எந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்?
அ) ஆக்ஸ்ஃபோர்டு
ஆ) கோபன்ஹேகன்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை

விடை: இ) அ மற்றும் ஆ

9)      பாலினச்சமத்துவத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
90
92
94
95

விடை: 95 (மொத்தம் 129 நாடுகள்)(பிரிட்டணை சேர்ந்த ஈகுவல் மெஷர்ஸ் 2030 அமைப்பு உருவாக்கியிருக்கிறது)(முதல் மூன்று இடங்கள் டென்மார்க், பின்லாந்து, ஸ்விடன்)

10)  பிரயூத் சன்-ஒ-சா எந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்?
தாய்லாந்து
ஜப்பான்
மியான்மர்
இந்தோனேசியா

விடை: தாய்லாந்து ( ராணுவ ஆதரவு கட்சி)(29வது பிரதமர்)




No comments:

Post a Comment