Tuesday 18 June 2019

ஜூன் 19 நடப்பு நிகழ்வுகள்



கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 19 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      மக்களவைத நிரந்தர தலைவராக தற்போது யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
வீரேந்திர குமார்
மேனகா காந்தி
ஓம் பிர்லா
முரளி மனோகர் ஜோஷி

விடை: ஓம் பிர்லா ( இவர் இராஜஸ்தான் மாநிலம் கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதி எம்.பி யாக உள்ளார். இதற்கு முன் 2 முறை மட்டுமே எம்.பியாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் 1996 இல் ஜி.எம்.சி.பாலயோகி, 2002 இல் முதல் முறையாக எம்.பியாக இருந்து தேர்ந்தெடுக்கப்படவர் முரளி மனோகர் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். )

2)      ஆவடி மாநகராட்சியாக எந்த சட்டம் படி தேர்வு செய்யப்பட்டுள்ளது?
கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1989
மதுரை மாநகராட்சி சட்டம் 1989
திருச்சி மாநகராட்சி சட்டம் 1989
சேலம் மாநகராட்சி சட்டம் 1989

விடை: கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1989 ( 25 வது பிரிவு) (15 வது மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 14 வது நாகர்கோவில். 13 வது ஓசூர்) ( ஆவடியில் உள்ள மக்கள்தொகை 5,20,000 மற்றும் 48 வார்டுகள் உள்ளன )

3)      பாரத் மாலா பரியோஜனா திட்டம் என்பது எதனுடன் தொடர்புடையது?
நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம்
கப்பல் போக்குவரத்து திட்டம்
கிராமப்புற மேம்பாட்டு திட்டம்
சுகாதார வளர்ச்சி திட்டம்

விடை: நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் ( இந்த திட்டத்தின் கீழ் சென்னை – சூரத் புதிய 4 வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு. இதன் மூலம் சென்னை முதல் மும்பை வரை செல்ல பயண நேரம் 100 கி.மீ வரை குறையும். இந்த திட்டம் நாசிக், அகமத்நகர், சோலாப்பூர், கர்னூல், கடப்பா ஆகிய நகரங்களின் வழியே 1461 கி.மீ தூரம் அமைக்கப்படும்)

4)      அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரை எந்த விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கலாம்?
ஹெச் 1 பி விசா
ஹெச் 2 விசா
ஹெச் 4 விசா
ஹெச் 6 விசா

விடை: ஹெச் 4 விசா. ( இந்த விசாவை நீக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தாலும், அங்கு உள்ள எம்.பிக்கள், தொழிலதிபர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்)

உங்களுக்கு இந்த வீடியோ மற்றும் பிளாக் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்களில் பகிரவும்.

5)      வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ 3500 உதவித்தொகை வழங்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?
மகாராஷ்டிரா
இராஜஸ்தான்
பஞ்சாப்
ஹரியானா

விடை: இராஜஸ்தான் ( முதல்வரின் யுவ சம்பல் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 3000 ரூபாயும், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு 3500 ரூபாயும் வழங்கப்படும்)

6)      அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிகளின் எண்ணிக்கை 2010 -2017 இல் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது?
30
32
36
38

விடை: 38 ( முதலிடத்தில் நேபாளம் 206.6%, 2வது இந்தியா மற்றும் பூடான் 38%, பாகிஸ்தான் 33%, வங்கதேசம் 26%, இலங்கை 15%.

7)      உலககோப்பை போட்டியில் அதிக சிக்ஸர்கள் (17) அடித்து சாதனை புரிந்த இயான் மோர்கல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து

விடை: இங்கிலாந்து ( ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 18 ஜூன் நடந்த போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆப்கன் வீரர் ரஷித்கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை கொடுத்து உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் விட்டுக் கொடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டு மற்றொரு சாதனையும் படைக்கப்பட்டுள்ளது)

8)      நரீந்ட பத்ரா என்பவர் யார்?
விளையாட்டு துறை செயலர்
விளையாட்டு துறை அமைச்சர்
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்
உலக ஒலிம்பிக் சங்க தலைவர்

விடை: இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ( மத்திய விளையாட்டு துறை செயலர் ராதே ஷ்யாம் ஜூலானியா இவருக்கு போட்டிகளில் வெளிநாட்டினர் அனைவருக்கு ஒத்துழைப்பு அளிக்க பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் வீரர்களை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அனுமதி அளிக்காததால் சர்வட்தேச ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது)

9)      தற்போது எத்தனை லட்சம் வெறுப்புணர்வை தூண்டும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்?
10
40
70
90

விடை: 90

10)  லிப்ரா என்ற பெயரில் எந்த சமூக வலைதளத்தில் பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது?
வாட்ஸ்அப்
பேஸ்புக்
டிவிட்டர்
இன்ஸ்டாகிராம்

விடை: பேஸ்புக்


 உங்களுக்கு இந்த வீடியோ மற்றும் பிளாக் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்களில் பகிரவும்.

1 comment: