Monday 24 June 2019

ஜூன் 25 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 25 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் எவ்வளவு உள்ளதாக நாடாளுமன்றத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது?
24 லட்சம் கோடி
34 லட்சம் கோடி
44 லட்சம் கோடி
54 லட்சம் கோடி

விடை: 34 லட்சம் கோடி (  தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுசில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் ( என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் ( என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது)

2)     தற்போது பதவி விலகியுள்ள ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் யார்?
ராஜேஷ் சர்மா
விரல் ஆச்சார்யா
சுர்ஜித் பர்லா
அரவிந்த் சுப்பிரமணியன்

விடை: விரல் ஆச்சார்யா (2016 இல் நியமிக்கப்பட்டார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றியவர்) ( இவர் மத்திய நியமனங்கள் குழுவால் நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரது ராஜினாமாவை அந்தக் குழு ஏற்க வேண்டும்)

3)      நெஸ்ஸெட் என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றமாகும்?
இத்தாலி
ஈரான்
இஸ்ரேல்
எத்தியோப்பியா

விடை: இஸ்ரேல்  ( கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன் யாகு ( லிக்குட் கட்சி) 120 இல் 36 இடங்கள் பெற்று அதிக இடங்களை கைப்பற்றியது. இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாததால் வரும் செப்டம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது) ( முன்னாள் ராணுவ தலைமை தளபதியான பெஞ்சமின் காண்ட்ஸின் தலைமையிலான புளூ அண்ட் வொயிட் கட்சிக்கு 35 இடங்கள் கிடைத்தன. இந்த கட்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே போட்டியிட்டு 2 ஆம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

4)      பியூஸ் கோயல் எந்த துறை அமைச்சராக உள்ளார்?
வர்த்தகத்துறை
பாதுகாப்பு துறை
மனிதவள மேம்பாட்டு துறை
இரயில்வே துறை

விடை: வர்த்தக துறை ( இவர் சிறப்பு பொருளாதார மண்டல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்)

5)      ஆஷ்லி பர்டி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளார்?
1
2
3
4

விடை: 1 ( இவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றிருந்தார். தற்போது பர்மிங்ஹாம் போட்டியில் பட்டம் வென்றார் ) ( முதலிடத்தில் இருந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸோகா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்)

6)      2022 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இருந்து எந்த போட்டி நீக்கப்பட்டுள்ளது?
மகளிரி கிரிக்கெட்
பீச் வாலிபால்
பாரா டேபிள் டென்னிஸ்
துப்பாக்கிச சுடுதல்

விடை: துப்பாக்கி சுடுதல் ( மகளிரி கிரிக்கெட், பாரா டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

7)      ஆளில்லா கனரக சரக்கு விமானத்தை எந்த நாடு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது?
இரஷ்யா
இஸ்ரேல்
சீனா
அமெரிக்கா

விடை: சீனா ( கான்சு மாகாணத்தில் ஜாங்க்யி பகுதியில் 500 கி.மீ தொலைவிற்கு 500 கிலோ எடையுடன் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.  இதை சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகமும், சீன வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.) ( சிறிது நாட்களுக்கு முன் சீனா ஆளில்லா ஹெலிகாப்டர் பரிசோதிது வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது)

8)      கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு எந்த இடத்தில் போர்விமானங்களை வைத்து நடைபெற்ற விழா நடை பெற்றது?
மகாராஷ்டிரா
ஜம்முகாஷ்மீர்
பஞ்சாப்
மத்தியப் பிரதேசம்

விடை: மத்தியப்பிரதேசம் ( குவாலியர் விமானப்படை தளம்) ( இங்கு கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட  5 மிராஜ் 2000 விமானங்கள், 2 மிக் 21 ரக விமானங்கள், ஒரு சுகோய் 30 எம்கேஐ விமானம்  காட்சிக்கு வைக்கப்படு இருந்தன)

9)      கூகுள் மேப்பிலிருந்து தற்போது எத்தனை போலி நிறுவன முகவரிகள் நீக்கப்பட்டுள்ளன?
30 லட்சம்
50 லட்சம்
70 லட்சம்
90 லட்சம்

விடை: 30 லட்சம்

10)  காமன்வெல்த் பொதுச்செயலாளரின் நிலையன வளர்ச்சிக்கான புதுமை விருது எந்த நாட்டுக்கு கிடைத்தது?
பிரிட்டன்
இந்தியா
பாகிஸ்தான்
சீனா

விடை: இந்தியா ( நித்தேஷ் குமார் என்பவர் பெற்றுள்ளார். இவர் ‘சான்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான கருவியை குறைந்த செல்வில் உருவாக்கியதற்காக லண்டனில் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் குறைபிரவசத்தில் பிறந்த பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டு உள்ளது)


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  


No comments:

Post a Comment