Saturday 15 June 2019

ஜூன் 16 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 16 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)   இந்தியாவின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ( 5 ட்ரில்லியன் )  அளவுக்கு உயர்த்த எந்த ஆண்டுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
2021
2022
2023
2024

விடை: 2024  ( தில்லியில் ஜூன் 15 ( நேற்று நடைப்பெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்த் முடிவு எடுக்கப்பட்டது.)

2)   காசநோயை ஒழிக்க எந்த் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
2020
2025
2027
2030

விடை: 2025

3)   தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் எத்தனையாவது மாவட்ட அருங்காட்சியகமாக அமைய உள்ளது?
20
21
22
23

விடை: 22 ( தமிழகத்தில் 12 கோட்டைகளை சிறந்த சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளது. விழுப்புரத்தில் உள்ள செஞ்சி கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை மூலம் 10 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில ஏற்படுத்தப்படும்)

4)   உலக அளவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் அமைய உள்ளது?
திருச்சி
சென்னை
சேலம்
வேலூர்

விடை: சேலம் ( தலைவவாசல் ) (496 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது)

5)   ராம் நாயக் என்பவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவார்?
இராஜஸ்தான்
மத்தியபிரதேசம்
உத்திரப்பிரதேசம்
மகாராஷ்டிரா

விடை: உத்திரப்பிரதேசம்

6)   குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் எத்தனை ஆசிய சிங்கங்கள் உள்ளன?
320
420
520
620

விடை: 520

7)   இரத்தத்தில் குளூக்கோஸ் குறைவு காரணமாக (ஹைபோகிளைசீமியா) பாதிக்கப்பட்டு குழந்தைகள் இறக்கும் சம்பவம் எந்த  மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது?
பீகார்
குஜராத்
பஞ்சாப்
ஹரியானா

விடை: பீகார் ( முசாஃபர்பூர் மாவட்டம் )

8)   நரேந்திர சிங் தோமர் என்பவர் எந்த துறையின் அமைச்சராக உள்ளார்?
சாலை போக்குவரத்து துறை
தொழில் துறை
வேளாண்துறை
விளையாட்டு துறை

விடை: வேளாண்துறை (குஜராத் பிரதமர் விஜய் ரூபானி விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச சந்த்தித்தார்.

9)   உலக வில்வித்தை சாம்பியன் போட்டி எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது?
இந்தோனேசியா
மலேசியா
தாய்லாந்து
நெதர்லாந்து

விடை: நெதர்லாந்து ( டென்பாஸ்ச் நகர் )

10)  எப்ஐஎச் ஆடவர் ஹாக்கி சீரிஸ் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?
தென் ஆப்பிரக்கா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா

விடை: இந்தியா ( 2 வது தென் ஆப்பிரிக்கா, 3 வது ஜப்பான் , 4 வது அமெரிக்கா) ( ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடைப்பெற்று வரும் போட்டியாகும்)

11)  கேரீ லாம் என்பவர் எந்த நாட்டின் தலைவர் ஆவார்?
திபெத்
தைவான்
ஹாங்காங்
நேபாளம்

விடை: ஹாங்காங் ( கைது செய்யப்படவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு நிலவியதால் இந்த சட்டத்தை நிறுத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார்)

12)  எந்த வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அங்கீகாரம் பெற்றுள்ளது?
சென்னை
ராஜஸ்தான்
பெங்களூர்
டெல்லி

விடை: சென்னை ( இதனுடன் சேர்த்து திருவனந்தபுரம், மும்பை, கோவா, புனே ஆகிய வானிலை மையங்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் 18 வது உலக வானிலை காங்கிரஸ் மாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்ப்பட்டு வருகிறது. 
சென்னை வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்ட ஆண்டு 1792 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முறையாக தொடங்கப்பட்டதாகும்.  இந்த மையம் கடந்த 140 ஆண்டுகளாக ஒரு நாள் கூட இடைவெளியின்றி வானிலை விவரங்களை ஆவணப்படுத்தி வருகிறது.)




No comments:

Post a Comment