Saturday 22 June 2019

ஜூன் 23 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 23 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தமிழக விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்கும் திட்டம் எந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது?
ஜூலை
செப்டம்பர்
நவம்பர்
டிசம்பர்

விடை: ஜூலை (2019) (இதற்கு முன் ஆந்திரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால அந்த மானிலங்களில் அந்த திட்டம் அதிகாரிகள் மட்டுமே செயல்படுத்த இயலும். ஆனால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இவை கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆட்சியர் வரை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். செல்லிடப்பேசி செயலியும் அறிமுகம் செய்யப்படுவதால் இதை அனைத்து விவசாயிகளும் தங்கள் புகார்களை இதில் பதிவு செய்து அனுப்ப இயலும்.

2)      பத்மஜா சுந்துரு என்பவர் எந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆவார்?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பேங்க் ஆப் இந்தியா
இந்தியன் வங்கி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

விடை: இந்தியன் வங்கி

3)      தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி பகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
12,425
12,524
12,254
12,452

விடை: 12,524  ( இந்த அனைத்ஹ்டு ஊராட்சிகளிலும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் இ-சேவை வசதிகள் கிடைக்கும் வகையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது)

4)      செயற்கைக்கோள் தகவல் பதிவிறக்கும் மையம் எந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது?
திருச்சி
திருநெல்வேலி
திருச்செந்தூர்
திருவாரூர்

விடை: திருநெல்வேலி (இந்த மையத்தில் இது தவிர தென்னிந்திய கடல் பகுதிகளில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றின் தகவல்களை ரேடார் மூஅம் பெற்று தகவல் பரிமாறும் வகையில் இந்த நிலையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.) ( மகேந்திரகிரி திரவ உந்தும ஆராய்ச்சி நிலைய் இயக்குநர் அருணன் ஆவார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

5)      வெறிநாய்க்கடி இல்லாத இந்தியாவாக மாற்ற எந்த ஆண்டை உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது?
2023
2025
2028
2030

விடை: 2030 ( கோவாவிற்கு இதற்கான இலக்காக 2025 ஆம் ஆண்டு கூறப்பட்டுள்ளது) (ரேபிஸ் இயக்க விழிப்புணர்வு இயக்குநர் முருகன் அப்புப்பிள்ளை)

6)      TN-LMCTS என்ற செயலி எதற்காக பயன்படுகிறது?
நுகர்வோர் புகார் அளிக்க
பள்ளி மாணவர்கள் புகார் அளிக்க
பெட்ரோல் நிலையங்களில் முறைகேட்டை புகார் அளிக்க
சுகாதாரத்துறை சம்பந்தப்பட புகார் தெரிவிக்க

விடை: பெட்ரோல் நிலையங்களில் முறைகேட்டை புகார் அளிக்க

7)      ஆச்சார்யா தேவவிரத் என்பவர் எந்த மாநிலத்தின் ஆளுநராக உள்ளார்?
ஜம்மு காஷ்மீர்
திரிபுரா
இமாச்சலபிரதேசம்
ஹரியானா

விடை: இமாச்சலப்பிரதேசம் ( இந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் பதவிபிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்)

8)      ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப் பிரிவின் தலைவர் யார்?
விபின் ராவத்
பரம்ஜித் சிங்
ராம் சர்மா
விக்ரம் சர்மா

விடை: பரம்ஜித் சிங் ( இவர் பாதுகாப்பு துறை செய்திதொடர்பாளருமாக உள்ளார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

9)      டிடி காஷ்மீர் சேனலில் தற்போது எந்த மொழியில் செய்தி ஒளிபரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
டோக்ரி
தோடா
இருளா
மால்தம்

விடை: டோக்ரி ( எல்லைப்பகுதிகளை சேர்ந்தோர் அனைவருக்கும் இலவச டிடிஹெச் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது) (தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்)

10)  உலககோப்பை போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?
சேத்தன் சர்மா
லசித் மலிங்கா
பிரட் லீ
முகமது சமி

விடை: லசித் மலிங்கா ( 2007, 2011 )  ( ஜூன் 22 நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முகமது சமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உலகக்கோப்பை போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்திய 2 வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதல் வீரர் சேத்தன் பகத் 1987 நியூசிலாந்து எதிராக )
( முகமது சமி சேர்த்து இதுவரை 10 பேர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்)

11)  ஆப்கானிஸ்தான் அமைதி மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
ஈரான்
ஈராக்

விடை: பாகிஸ்தான் ( இஸ்லமாபாத் ) ( ஜூன் 22 தொடங்கிய இந்த மாநாடு 3 நாள் நடைபெற உள்ளது) ( அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு  பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஹெக்மத்யார் இதில் கலந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

12)  உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26
31
33

விடை: 31 ( 1988 இல்  18 இல் இருந்து 26 ஆகவும், 2009 இல் 31 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது) ( தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 58, 669 என்பதால் நீதிபதிகளின் எண்ணிக்கையினை உயர்த்தவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்த தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார்)


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  





2 comments: