Thursday 20 June 2019

ஜூன் 21 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 21 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் யார்?
மசூத் உசைன்
நவீன் குமார்
சுப்பிரமணியம்
பிரபாகரன்

விடை: நவீன் குமார் ( ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவான 9.19 டி.எம்.சி தண்ணீரில் 1.729 டி.எம்.சி நீர் மட்டுமே தற்போது(ஜூன் 1 -19 ) கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்)  ( காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன்) ( காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் உசைன்) ( காவிரி  மேலாண்மை வாரியம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டம் 1956  பிரிவு 6(ஏ) படி அமைக்கப்பட்டுள்ளது)

2)      டாக்டர் சுதா சேஷய்யன் எந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்?
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்

விடை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  


3)      இந்தோ – இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள காய்கறி மகத்துவமையம் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் உள்ளது?
மதுரை
திண்டுக்கல்
சேலம்
கோவை

விடை: திண்டுக்கல் ( ரெட்டியார் சத்திரம் ) ( 2012 இல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த இடம் 13 ஏக்கர் பரப்பளவில் உள்ளது) ( இதனை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா ஆய்வுசெய்தார்)

4)      2019 ஆம் ஆண்டு யோகா தினத்தின் கருத்துரு என்ன?
உடல் ஆரோக்கியத்துக்கான யோகாசனம்
மன ஆரோக்கியத்துக்கான யோகாசனம்
இதய ஆரோக்கியத்துக்கான யோகாசனம்
சமூக ஆரோக்கியத்துக்கான யோகாசனம்

விடை: இதய ஆரோக்கியத்துக்கான யோகாசனம் ( ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த மாநில முதல்வர் ரகுவர் தாஸ்)

5)      பிஜூ ஸ்வஸ்திய கல்யாண் திட்டம் என்பது ஒடிசாவில் எதற்காக செயல்படுத்தி வருகிறது?
மகளிர் நலன்
குழந்தைகள் நலன்
முதியோர் நலன்
இலவச மருத்துவ திட்டம்

விடை: இலவச மருத்துவ திட்டம் ( 70 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

6)      ஜூனியர் ஆசிய பாட்மிட்டன் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
சீனா
இரஷ்யா
இந்தோனேசியா
பிரான்ஸ்

விடை: சீனா ( இதில் கலந்துகொள்ள உள்ள 23 பேரில் 3 பேர் தமிழர்கள்) ( சதீஷ்குமார், சித்தாந்த் குப்தா, சங்கர் முத்துசாமி)

7)      மகளிரி கிரிக்கெட் போட்டியை எந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது?
2022
2026
2030
2032

விடை: 2022 ( துப்பாக்கி சுடுதல் விளையாட்டை விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது)

8)      துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்தராவவை எந்த விளையாட்டு போட்டிக்கான தேர்வுக்குழு சுதந்திர உறுப்பினராக தேர்வு செய்துள்ளது?
துப்பாக்கி சுடுதல்
வில்வித்தை
ஹாக்கி
கால்பந்து

விடை: வில்வித்தை ( உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி)

9)      தற்போது எந்த நாட்டின் மீது சர்வதேச அளவிலான போட்டியை நடத்த விதித்திருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது?
பாகிஸ்தான்
சீனா
இரஷ்யா
இந்தியா

விடை: இந்தியா

10)  இமயமலயிலிருந்து பனி உருகுவது எத்தனை மடங்கு அதிகரித்து இருப்பதாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது?
1
2
3
4

விடை 2 ( 2000 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போது 2 மடங்கு வேகமாக உருகி வருவதால் இந்தியா, சீனா தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு ( கல்வி தந்திரம்) சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC GROUP களுக்கு பகிரவும்.  

2 comments:

  1. 7 th question mahalir cricket potti answer- 2002. Option la 2002 illa

    ReplyDelete
  2. 7th question answere thappa print aagiduchi sir

    ReplyDelete