Saturday 8 June 2019

ஜூன் 9 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 9 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
உங்கள்  TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.


1)      நிஷான் இஸ்ஸூதீன் என்ற விருது பிரதமர் மோடிக்கி எந்த நாடு கொடுத்துள்ளது?
இலங்கை
மாலத்தீவு
இந்தோனேசியா
வங்கதேசம்

விடை: மாலத்தீவு ( மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி 6 முக்கிய ஒப்பந்ததங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலோர கண்காணிப்பு ராடார் முறை மற்றும் மாலத்தீவு பாதுகாப்புப் படையினருக்கு கூட்டுப்பயிற்சி மையம் இரு நாட்டு தலைவர்களும் திறந்து வைத்தனர். அந்த நாட்டின் தென் பகுதியில் “வெள்ளிக்கிழமை மசூதி” அமைத்து தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மாலத்தீவில் ரூபே அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் (சீனா ஆதரவு).  தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி(இந்தியா ஆதரவு) )

2)      ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி எத்தனையாவது முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்?
13
15
17
19

விடை: 17 (புதிய ஆந்திரத்தின் 2 வது முதல்வர். ஆளுநர் நரசிம்மன். உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி)

3)      “கீ4 கீபோர்டு” என்ற செயலி எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?
தடகள் வீரர்களுக்கு
கண் மாற்றுத்திறனாளிகள்
பணபரிவர்த்தனை
உடல்நலத்துக்காக

விடை: கண் மாற்றுத்திறனாகளுக்கு (வடிவமைத்தவர் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வெ.கிருஷ்ணமூர்த்தி)

4)      இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
உத்திரப்பிரதேசம்
மகாராஷ்டிரா
குஜராத்
கர்நாடகா

விடை: குஜராத்( மஹிசாகர் மாவட்டம், ராலி நகர்) உலகின் 3 வது டைனோசர் அருங்காட்சியகம் ஆகும்.

5)      யோகா ஆரோக்கிய நிகழ்வுகளுக்கு ஊடங்கங்களை கவுரவிக்க எத்தனை விருதுகள் வழங்கப்பட உள்ளன?
11
22
33
44

விடை: 33 ( செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி தனித்தனியாக 11 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 23 மொழிகளில் வரும் ஊடகங்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது)

6)      ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?
சீனா
இரஷ்யா
அமெரிக்கா
ஜப்பான்

விடை: ஜப்பான் ( ஃபுகோகா நகர்)

7)      சுபாஷ் சந்திர கார்க் என்பவர் எந்த துறையின் செயலராக உள்ளார்?
தொழில்துறை
பொருளாதாரத விவகார துறை
உள்துறை
வெளியுறவு துறை

விடை: பொருளாதார விவகாரத்துறை ( இவர் பிட்காயின் பரிவரித்தனைக்கு 10 ஆண்டுகள் சிறை அளிக்கும் மசோதா தயாரித்து வருகிறார்)

8)      பிரெஞ்சு ஓபன் மகளிர் பிரிவில் பட்டம் வென்றுளா ஆஷ்லி பார்ட்டி எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?
அமெரிக்கா
செக் குடியரசு
பிரிட்டன்
ஆஸ்திரேலியா

விடை: ஆஸ்திரேலியா

9)      பி.எம் கிசான் என்ற விவசாயிகள் நிதியுதவி திட்டம் தற்போது எத்தனை விவசாயிகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது?
10.5 கோடி
12.5 கோடி
14.5 கோடி
16.5 கோடி

விடை: 14.5 கோடி

10)  கடற்படைக்கு எத்தனை ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் என கோவா கடற்படை தலைமை அதிகாரி ஜார்ஜ் பினு மூட்டில் கூறியுள்ளார்?
100
111
121
131

விடை: 111 ( இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது)

11)  ஐக்கிய ஜனதா தள அரசு தற்போது எந்த மாநிலத்தில மாநில அந்தஸ்து பெற்றுள்ளது?
மிசோரம்
அருணாசலப்பிரதேசம்
மேகாலயா
சிக்கிம்

விடை: அருணாசலப்பிரதேசம் (பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கட்சி ஆகும்)     ( 7 தொகுதிகளில் பாஜக கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி. 9.9% வாக்குகள். இந்த கட்சியின் சின்னம் அம்பு. இதை இனி அருணாசலப்பிரதேசத்திலும் பயன்படுத்தலாம்)

12)  ருச்சி கான்ஷியாம் என்பவர் எந்த நாட்டின் இந்திய தூதர் ஆவார்?
அமெரிக்கா
இங்கிலாந்து
இரஷ்யா
பிரான்ஸ்

விடை: இங்கிலாந்து ( உலகக்கோப்பை விளையாட சென்ற இந்திய வீரர்களுக்கு விருந்து கொடுத்தார்)







No comments:

Post a Comment