Monday 1 July 2019

ஜூலை 2 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 2 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தற்போது நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கிருஷ்ணன் எந்த துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்?
தலைமைசெயலகம்
நிதித்துறை
வீட்டு வசதி துறை
தொழில் துறை

விடை: நிதித்துறை ( இந்த அறிவிப்பை தலைமச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார். இதற்கு முன் இவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ராஜேஷ் லக்கானிக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயலாளர் பதவியுடன் சேர்த்து கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.) ( தற்போது நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் நிதித்துறை செயலாளராகவும் ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும், ‘தொலைநோக்கு திட்டம் 2023’ மாநாட்டை வடிவமைத்து முக்கிய பங்கை செலுத்தியுள்ளார் )

2)      ரிசர்வ் வங்கி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1934
1935
1949
1969

விடை: 1934 ( இந்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களை விட கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். முக்கியமாக வங்கிசாராத நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் விவகாரத்தில் கூடுதல் அதிகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் 23 நிலவரப்படி 9,463 வங்கிசார நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்துள்ளது.)நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      தங்கத்தின் மீதான் இறக்குமதி வரி தற்போது எத்தனை சதவீதம் உள்ளது?
2
8
10
12

விடை: 10 ( 2018-19 இல் தங்கம் 982 டன் இறக்குமதி செய்யப்பட்டது. 2017-18 இல் 955 டன், 2016-17 இல்755 டன், 2015-16 இல் 968 டன் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      மாதிரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த மாதம் தொடங்க உள்ளது?
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
நவம்பர்

விடை: ஆகஸ்ட் (2019 ) ( செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது. கடந்த 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள்தொகை கண்கக்கெடுப்பு சட்டத்தின்படி 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை  கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த  கணக்கெடுப்பு நடைபெற உள்ளது)    ( 2021 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இதை சரிபார்க்கும் பணி மார்ச் 1 முதல் 5 வரை நடைபெற உள்ளது ) ( 33 லட்சம் பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் ) கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

5)      பருவ நிலை காரணமாக 2021 மக்களதொகை கணக்கெடுப்பு 2020 இல் நடத்தப்பட உள்ள மாநிலங்களின் பட்டியலில் பின் வரும் எந்த மாநிலம் இல்லை?
ஜம்மு-காஷ்மீர்
ஜார்கண்ட்
உத்தர்கண்ட்
ஹிமாசலபிரதேசம்

விடை: ஜார்கண்ட் ( இது தவிர ஜம்மு காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளது)

6)      உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ் எந்த இரயிலில் முதன் முதலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டன்?
உழவன் ரயில்
சிலம்பு ரயில்
குருதேவ் விரைவு ரயில்
காவிரி விரைவு ரயில்

விடை: சிலம்பு ரயில் ( சென்னை எழும்பூர் முதல்  செங்கோட்டைக்கு பிப்ரவரி 12 முதல் இயக்கப்பட உள்ளது ) ( உழவன் ரயில் என்பது தஞ்சை – சென்னை , குருதேவ் இரயில் நாகர்கோவில் –ஷாலிமர், காவிரி ரயில் சென்னை- மைசூர்)  ( மாவேலி விரைவு ரயில் மங்களூரு- திருவனந்தபுரம் )

7)      எத்தனை முத்ரா கடன் கணக்குகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது?
2,333
2,331
2.313
2,133

விடை 2,313 ( இதில் தமிழகம் அதிகமாக 344, சண்டிகர் 275, ஆந்திரம் 241 ஆகும் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      www.psbloansin59minutes . com என்ற இணையதளம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
விவசாயிகள் கடன் பெற
சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெற
மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் பெற
மாணவர்கள் கல்விக் கடன் பெற

விடை: சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெற ( இதன் மூலம் 59 நிமிடங்களில் கடன் பெற முடியும். இதில் 20 பொதுத்துறை, 4 தனியார், கூட்டுறவு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது) ( தற்போது சிறு , குறு நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இதை 50 சதவீதமாக உயர்த்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது)

9)      நோபர்ல் பரிசு பெற்றவர்களின் 69 வது சந்திப்பு கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?
பிரான்ஸ்
சுவிடன்
ஜெர்மனி
இஸ்ரேல்

விடை: ஜெர்மனி ( லிண்டா நகர் ) (இதில் 89 நாடுகளை சேர்ந்த 580 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் 7 நாள்கள் நடைபெறுகிறது.)

10)  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்பு திருத்த சட்டம் எது?
101
102
103
104

விடை: 103 (ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது) (இதன் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15, 16 ஆகும் )

11)  தற்போது விம்பிள்டன்னின் எத்தனையாவது போட்டி தொடங்கி உள்ளது?
113
123
133
143

விடை: 133 ( லண்டன் ஆல் இந்தியா கிளப் சார்பில் ஜூலை 1 இல் தொடங்கியது. ஜூலை 14 வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய, பிரெஞ்சு, யுஎஸ், விம்பிள்டன் உள்ளிட்ட 4 கிராண்ஸ்லாம் போட்டிகள் உள்ளது. இதில் புல் தரையில் நடைபெறும் விம்பிள்டன் போட்டி முதன்மையானதாக கருதப்படும். சாம்பியனுக்கு 20.55 கோடி ரொக்கம் தரப்படுகிறது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

12)  ஹாங்காங்கை பிரிட்டிஷ் சீனாவிடம் ஒப்படைத்த வருடம் எது?
1993
1994
1995
1997

விடை: 1997 ( ஜூலை 1 ) ( தற்போது ஹாங்காங் தலைவர் கேரி லாம்.) ( 22 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்ட தினமான் ஜூலை 1 இல் மக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் )

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் ஆர்.சுப்ரமணியகுமார் அந்த பதவியில் இருந்தார் ) ( இதற்கு முன் இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு பதவி வகித்துள்ளார் )

தற்போது டாடா டெலி சர்வீஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதன் மூலம் ஏர்டெல் டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்தை இணைத்துக் கொண்டது.

இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைப்பாம்புகளுக்கு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்து தன் இயல்புகளை கண்டறியும் முயற்சி நடைபெறுகிறது. இதனை கால்நடை மருத்துவர் அசோகன் பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்து இந்த கருவிகளை பொருத்தியுள்ளார். கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment