Friday 12 July 2019

ஜூலை 13 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 13 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

மன்னிக்கவும். இன்று தவிர்க்கமுடியாத காரணத்தினால் தேர்வு முறையில் வைக்க இயலவில்லை. இந்த முறை உங்களுக்கு பயனளிகிறதா என கூறவும். நாளை முதல் எப்போதும் போல் தேர்வு முறையில் பதிவிடப்படும்.

1)      மத்திய அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கி வரும் வருங்கால வைப்பு நிதி  கழகத்தின் வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மூ. பழனிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

2)      பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க தனிநபர் மசோதாவை மக்களவையில் பாஜக சார்ந்த உறுப்பினரான சஞ்சய் ஜாய்ஸ்வால் தாக்கல் செய்துள்ளார்.

அனைவரும் வாக்களிப்பதை கட்டாயாமாக்கும் மசோதாவை பாஜக எம்.பி.ஜனார்த்தனன் தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டம் மொத்தம் 28 நாடுகளில் அமலில் உள்ளது. ( சில நாடுகள்  அல்ஜீரியா, பொலிவியா, பிரேசில் , எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      ஆப்கன் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கேப்டனாக இருந்த குல்தீன் நைப் தலைமையிலான அணி உலகக்கோப்பையில் தோல்வி அடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

4)      செரினா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் 7 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும், யுஎஸ் ஓபனில் 6 முறையும், விம்பிள்டனில் 7 முறையும் பட்டம்  என மொத்தம் 23 முறை பட்டம் வென்றுள்ளார். இந்த முறை பட்டம் வென்றால் ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் ஸ்மித் சாதனையை சமன் செய்வார்.

5)      வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜீவான் குவாய்டாவை அந்த நாட்டின் இடைக்கால அதிபராக கிரீஸ் அரசு ஆதரித்துள்ளது.

6)      டிவிஎஸ் மோட்ட்டார்  எத்தனாலில் இயங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐஇ100 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.  கரும்பில் இருந்து எத்தனால் எளிதில் பிரித்து எடுக்க இயலும் என்பதால் மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

7)      விண்ணப்பிக்காமலேயே அனைத்து சான்றிதழ்களும் கிடைக்கும் மக்களைத் தேடி அரசு என்ற புதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8)      தூத்துக்குடியில் முல்லைக்காடு என்ற பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் செயல் திட்டம் தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 60 மில்லியன் கடல் நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது.

9)      கோவையில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்பட உள்ளது

           நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


10)  11 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில்  சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

11)  2006 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு உள்ளதாக ஐ.நா சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

12)  யானைகள் புனர்வாழ்வு மையம் கேரள மாநிலம் கோட்டூர் காப்புகாடு பகுதியில் அமைக்கப்பட உள்ளது.  இந்த மையம் இலங்கையில் உள்ள பின்னவல பகுதியில் உள்ள மையத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டு உள்ளது.

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


No comments:

Post a Comment