Sunday 21 July 2019

ஜூலை 22 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 22 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     டிஜிட்டல் பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் பங்குகள் எத்தனை சதவீதம்?
50
55
60
65

விடை: 55 ( நெட் பேங்கிங் 24%, யுபியை 20% ) ( இந்திய அளவில் பணபரிமாற்றத்திற்கு அதிக அளவில் விரும்பும் செயலியாக கூகுள்-பே உள்ளது)

2)     2017-2018 நிதியாண்டில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் எவ்வளவு?
8 லட்சம் கோடி
9 லட்சம் கோடி
10 லட்சம் கோடி
12 லட்சம் கோடி

விடை: 10 லட்சம் கோடி ( 10.2 லட்சம் கோடி )

3)     சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எத்தனை ஆறுகளை தூய்மைப்படுத்த 5000கோடி நிதி ஒதுக்கியுள்ளது?
31
32
33
34

விடை: 34 ( 16 மாநிலங்கள், 77 நகரங்கள், 34 ஆறுகளுக்கு 5870.55 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறியுள்ளார்)
4)     தேர்தல் நிதிப்பத்திரங்கள் கடந்த ஒரு ஆண்டில் எவ்வளவு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது?
4000 கோடி
5000 கோடி
6000 கோடி
7000 கோடி

விடை: 5000 கோடி ( 5,851 கோடி ) ( இதில் 20 கோடி குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றம் செய்யாததால் காலாவதியாகிவிட்டது) (டெல்லியில் மட்டும் 4,751 கோடி பத்திரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இங்கு விற்பனை செய்யப்பட்டது 874 கோடி. பல்வேறு கட்சிகளின் தலைமை அலுவலம் அங்கு உள்ளதால் இவ்வளவு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது ) ( சென்னையில் 184 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது )

5)     பூஷன் பட்வர் குழு எதற்காக அமைக்கப்பட்டுள்ளது?
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்த
கல்லூரி மாணவர்களின் உதவித்தொகை குறித்து ஆராய
ஒரே நேரத்தில் 2 பல பட்டப்படிப்புகள் படிப்பது குறித்து ஆராய
கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை கண்காணிக்க

விடை: ஒரே நேரத்தில் 2 பல பட்டப்படிப்புகள் படிப்பது குறித்து ஆராய (இவர் யுஜிசியின் துணைத்தலைவர் ஆவார். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஃபுர்கான் கமர் என்பவர் தலைமையில் இதே காரணத்திற்கு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதற்கு அனுமதி அளித்தாலும் யுஜிசி நிராகரித்தது)

6)      சர்வதேச தடகள போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
மலேசியா
செக் குடியரசு
இந்தோனேசியா
கத்தார்

விடை: செக் குடியரசு ( இதில் ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார்) ( கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற தபோர் போட்டியில் 200 மீட்டர் பிரிவில் வென்று தங்கம் வென்றார்) (இவர் இதற்கு முன் கிளாட்னோ போட்டி, குண்டோ போட்டி, போன்ஸான் தடகள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்று ஒரே மாதத்தில் 5 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் )




7)      இந்தோனேசிய பேட்மிட்டன் போட்டியில் சிந்து என்ன பதக்கம் வென்றார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
எதுவுமில்லை

விடை: வெள்ளி ( ஜப்பான் வீரர் அகேன் அமருச்சியிடம் தோல்வியடைந்தார் )

8)      எம்எஸ்கே பிரசாத் எதன் தலைவராக உள்ளார்?
பாட்மிட்டன் குழு தலைவர்
பிசிசிஐ தேர்வுகுழு தலைவர்
இந்திய ஒலிம்பில் சங்க தலைவர்
இந்திய ஆடவர் ஹாக்கி பயிற்சியாளர்

விடை: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் ( இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அம்பத்தி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டியில் இவரை சேர்க்காததால் சர்ச்சை எழுந்த நிலையில் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார் )

9)      2019 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு யார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்?
பிரியதர்ஷினி
கோதண்டராமன்
சௌம்யா
ஆர்த்தி என்.ராவ்

விடை: சௌம்யா ( இவர் டிசம்பர் 15 முதல் 2020 ஜனவரி 1 வரை நடைபெறும் 93 வது மாநாட்டுக்கு தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  சங்கீத கலாச்சார்யா விருதுக்கு வாய்ப்பாட்டு கலைஞர்கள் சீதா நாராயணன், எம்.எஸ்.ஷீலா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கோதண்டராமன் மற்றும் ராஜ்குமார் டிடிகே விருதுகளையும், டாக்டர் ஆர்த்தி என்.ராவ் இசைக்கலைஞர் விருதையும் பெற்றுள்ளார். இந்த விருதுகள் ஜனவரி 1 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.) ( நிருத்ய கலாநிதி விருது பிரியர்ஷினிக்கு ஜனவரி 3 ஆம் தேதி நடனவிழாவின் தொடக்கவிழாவில் வழங்கப்பட உள்ளது )

10)  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொடர் ஓட்டமாக 90 நாட்களில் 4,035 கி.மீ கடந்த  சுபியா என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ?
உத்திரப்பிரதேசம்
இராஜஸ்தான்
பஞ்சாப்
ஹரியானா

விடை: இராஜஸ்தான்
11)  வங்கதேச பெண் எழுத்தாளாரன தஸ்லிமா நஸ்ரினுக்கு தற்போது எத்தனை நாட்கள் விசா நீட்டிக்கப்பட்டு உள்ளது?
3 மாதம்
6 மாதம்
9 மாதம்
1 வருடம்

விடை: 1 வருடம் ( 2004 முதல் இந்தியாவில் வசிக்கும் இவர் 1994 இல் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் எழுதியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியேறினார் ) ( இவர் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்)

12)  நெடுஞ்சாலை கட்டுமான திட்டங்களுக்கு 1.25 லட்சம் கோடி கடனளிக்க முன்வந்துள்ள நிறுவனம் எது?
ரிலையன்ஸ்
விப்ரோ
எல்ஐசி
அதானி குழுமம்

விடை: எல்ஐசி ( 8.41 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டத்திற்கு இந்த கடனளித்துள்ளது. வருடத்திற்கு 25 ஆயிரம் கோடி வீதம் 2024 வரை அளிக்க திட்டமிட்டுள்ளது) ( தற்போது 5.35 லட்சம் கோடி ரூபாய அளவுக்கு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது )


13)  நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் எத்தனை சதவீதம் இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கியால் கூறப்பட்டு உள்ளது?
4.0
4.1
4.2
4.3

விடை: 4.1

14)  தைபேவில் 2 வது உலக காது கேளாதோர் பாட்மிட்டன் சாம்பியன் போட்டியில் ஜெ.ஜெர்லின் அனிகா எந்த பட்டம் வென்றுள்ளார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
4 வது இடம்

விடை: தங்கம் ( இவர்  முதல் நிலை வீராங்கனையான ஃபிஞ்சா ரோசெண்டாலை எதிர்த்து வென்றுள்ளார் )

No comments:

Post a Comment