Tuesday 23 July 2019

ஜூலை 24 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 24 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     இந்தியா முழுவதும் எத்தனை போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது?
21
22
23
24

விடை: 23 (அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 8, டெல்லியில் 7 உள்ளதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

2)     தமிழக போக்குவரத்து கழகங்கள் மறுக்கட்டமைப்பு திட்டத்தின் படி எத்தனை  மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது?
500
1000
1500
2000

விடை: 2000( 12000 பி.எஸ் 4 ரக பேருந்துகள் வாங்கவும் திட்டமிடப்ப்ட்டு உள்ளது) ( முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க ஜெர்மனி கேஎப்டபிள்யூ நிதியுதவி அளிக்கவுள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 மதுரையிலும், 10 கோவையிலும் இயங்க உள்ளன)
(இதன் முன்னோட்டமாக 2 மின்சார பேருந்துகள் சென்னையில் அசோக் லேலண்ட நிறுவனத்தின் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.)

3)      இந்த ஆண்டில் வருமானவரி வசூல் இலக்கு எத்தனை கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது?
16000
75000
85000
92500

விடை: 92500 கோடி ( ஜூலை 31 கடைசி தேதி. தற்போது வரை 16,560 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்) ( கடந்த வருடம் 85 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததில் 75,100 கோடி வசூலிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் வரை அபராதத்துடன் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது )

4)      ஒரு மாவட்டத்தில் சராசரி மக்கள் தொகை எத்தனை லட்சத்திற்கு மேல் இருந்தால் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும்?
10 லட்சம்
15 லட்சம்
20 லட்சம்
25 லட்சம்

விடை: 20 லட்சம் ( ஒரு மாவட்டத்தில் 10 அல்லது 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      ஆதாயம் தரும் பதவி எது என்பதை நிர்ணயிக்க மொத்தம் எத்தனை பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது?
3
8
15
22

விடை: 15 ( 10 மக்களவை உறுப்பினர்கள், 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் ) ( சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர், ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கக்கூடாது என்பது அரசியலமைப்பு கூறுகிறது. அது என்ன வகையான பதவிகள் ஆதாயம் தரும் பதவிகள் என்பதை வரையறை செய்ய தற்போது குழு அமைக்கப்பட்டு உள்ளது)

6)      தற்போது மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பணியிட பாதுகாப்பு மசோதா சட்ட நடைமுறைகள் ஒரு நிறுவனத்திற்கு எத்தனை பேர் இருந்தால் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது?
5
10
15
20

விடை: 10 அல்லது அதற்கு மேல் ( நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயிக்க இந்த மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது  மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் சுங்வார் தெரிவித்துள்ளார். இது 13தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

7)      1954 முதல் தற்போது வரை எத்தனை வெளிநாட்டவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன?
250
264
272
321

விடை: 272 ( வெளிநாட்டவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் இதில் அடங்குவர். மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்)

8)      தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் வெளியிட காலக்கெடு எப்போது வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது?
ஆகஸ்டு 31
செப்டம்பர் 31
டிசம்பர் 31
ஜனவரி 31 , 2020

விடை: ஆகஸ்ட் 31,2019 ( உச்சநீதிமன்றம் அனுமதி) (இந்த பட்டியல் தயாரிக்கும் குழு தலைவர் பிரதீப் ஹஜேலா )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      உலக்கோப்பை மகளிர் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்?
1
2
3
4

விடை: 1 ( நாமக்கலை சேர்ந்த பி.மாரியம்மாள்)
10)  பிரிட்டன் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்?
போரிஸ் ஜான்ஸன்
ஜெரிமி ஹன்ட்
தெரசா மே
கேமரூன்

விடை: போரிஸ் ஜான்ஸன் ( இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

11)  தற்போது மரணமடைந்த லீ பெங் என்பவர் எந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஆவார்?
சீனா
ஜப்பான்
சிங்கப்பூர்
மலேசியா

விடை: சீனா ( 1987 முதல்  1998 வரை 4 வது பிரதமராக இருந்தவர். இவர் காலத்தில்தான் 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கப்போராட்டத்தில் ஏராளமானவர்கள் இறந்தனர்)

12)  பார்ச்சூன் வெளியிட்டுள்ள 500 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
100
102
106
109

விடை: 106 ( கடந்த ஆண்டை விட 42 இடங்கள் முன்னேறி உள்ளது. கடந்த வருடம் 106 ஆவது இடத்தில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 117 வது இடத்திற்கு சென்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் ஓஎன்ஜிசி(160), எஸ்பிஐ(236), டாடா மோட்டார்ஸ்(265), பிபிசிஎல்(275), ராஜேஸ் எக்ஸ்போர்ட் (495).   முதலிடத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் எப்போதும் போல் முதலிடத்தில் உள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment