Monday 15 July 2019

ஜூலை 16 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 16 நடப்பு நிகழ்வுகள் தேர்வு

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      தற்போது நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி தொடங்கி எத்தனை வருடங்கள் ஆகி உள்ளன?
40
42
44
46

விடை: 44 ( இது 12 ஆவது உலகக்கோப்பை போட்டியாகும். இந்த கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 20 விக்கெட்களை வீழ்த்து உள்ளார்)

2)      தேசதுரோக சட்டப்பிரிவு எத்தனை?
122 ஏ
124 ஏ
126 ஏ
128 ஏ

விடை: 124 ஏ ( 1870 இல் ஆங்கிலேயர்களால் தன்னை விமர்சித்துப் பேசுவதையும் எழுதுவதையும் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட சட்டமாகும். ஆனால் இந்த சட்டத்தை பிரிட்டன் தன் நாட்டிலேயே நீக்கி விட்டது.)
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

3)      அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க எவ்வளவு தொகை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது?
3.3 லட்சம் கோடி
6.3 லட்சம் கோடி
9.3 லட்சம் கோடி
12.3 லட்சம் கோடி

விடை: 12.3 லட்சம் கோடி ( இதனை ஜேஎம் பைனான்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிட்டுள்ளது)

4)      சந்திராயன் 2 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ஏவுவதற்கு எத்தனை நிமிடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது?
50.24 நிமிடம்
52.24 நிமிடம்
54.24 நிமிடம்
56.24 நிமிடம்

விடை: 56.24 நிமிடம் ( சந்திராயன் விண்கலத்தினை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராக்கெட்டின் முக்கிய பகுதியான கிரையோஜெனிக் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினில் எரிபொருளை வேகமாக எரிக்க ஆக்ஸிஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் நிரப்பப்படும். இதில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதை கடைசி  நேரத்தில் கண்டுபிடித்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது )

( சந்திராயன் 2 விண்கலம் திட்டத்துக்கு மொத்தம் ரூ978 கோடி செலவிடப்பட்டுள்ளது.  ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு ரூ.375 கோடியும், இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய கருவிகளுக்கு ரூ.603 கோடி செலவிடப்பட்டுள்ளது)

5)      ஐசிசி உலகக்கோப்பை லெவன் அணியில் இந்திய வீரர்கள் எத்தனிய பேர் இடம்பெற்றுள்ளனர்?
1
2
3
4

விடை: 2 ( ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா(வேகப்பந்து வீச்சாளர்) ) (உலகக்கோப்பை தொடர் நாயகன் கேன்வில்லியம்சன்) (இறுதிப்போட்டி விளையாடிய இங்கிலாந்து (4), நியூசிலந்து(2) அணிகளில் 6 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர்.  ஆஸ்திரேலியாவில் இருந்து 2 வீரர்களும், வங்கதேசத்தின் ஷகிப்அல்ஹசன் இடம்பெற்றுள்ளனர். 12 வது வீரராக ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)தேர்வாகியுள்ளார்.)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      நோவக் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் தற்போது எத்தனையாவது இடத்தில் உள்ளார்?
1
2
3
4

விடை: 1 ( 5 வது முறையாக விம்பிள்டன் போட்டியை வென்றுள்ளார்) (சர்வதேச தரவரிசை பட்டியலில் ஜோகோவிச் 1, நடால் 2, டொமினிக் தீம் 3 இடத்தில் உள்ளனர். மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டி 1, நவோமி ஒஸாகா 2, பிளிஸ்கோவா 3 இடத்தில் உள்ளனர்)

7)      கல்விக்கான பிரத்யேக காணொளிகளை அறிமுகம் செய்ய உள்ள சமூக வலைதளம் எது?
பேஸ்புக்
கூகுள்
யூடியூப்
டிவிட்டர்

விடை: யூடியூப்

8)      யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் எத்தனை இடங்கள் உள்ளன?
30
32
38
42

விடை: 38 ( இதில் மொத்தம் 1,121இடங்கள் உலக பாரம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலாச்சார பிரிவில் 869 இடங்களும், இயற்கை சார்ந்த பிரிவில் 213 இடங்களும், 39 கலப்பு இடங்களாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளன. ஜூலை 6 ஆம் தேதி பிங்க் சிட்டி, மதில் சூழ்ந்த நகரம் என அழைக்கப்படும் ஜெய்ப்பூர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.  இந்தியாவானது சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை அடுத்து உள்ளது. 1983 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா கோட்டை, தாஜ்மகால் ஆகிய 4 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  தற்போது இந்த யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டியின் 43 ஆவது மாநாடு அசர்பைஜான் நாட்டில் பாகு நகரில் நடைபெற்றது)

( இந்தியாவில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செய்லபடும் யுனெஸ்கோ ஒத்துழைப்புக்கான இந்திய தேசிய ஆணையம் என்ற அமைப்பும் தொல்லியல் துறையும் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை தயாரித்து அதற்கான ஆவணங்களுடன் யுனெஸ்கோவுக்கு அனுப்பும் )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      மூடநம்பிக்கைக்கு எதிராக சட்டத்தை எந்த மாநிலம் இயற்ற திட்டமிட்டுள்ளது?
கேரளா
கர்நாடகா
மகாராஷ்டிரா
டெல்லி

விடை: கேரளா ( இந்த சட்டத்தில் ஜோதிடம், சாஸ்திரத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.  இதற்கு முன் மகாராஷ்டிரம் 2013 மற்றும் கர்நாடகா 2017 இல் சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது)

10)  ஜூனியல் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது?
பிரான்ஸ்
ஜெர்மனி
பிரேசில்
இரஷ்யா

விடை: ஜெர்மனி ( சூல் நகர் ) ( இதில் இளவேனில் வளரிவன் என்பவர் 251.6 புள்ளிகள் பெற்று தங்கமும்,  மொஹாலி கோஷ் 250.2 புள்ளிகள் பெற்று வெள்ளியும், பிரான்சின் முல்லர் வெண்கலமும் பெற்றுள்ளனர்) (இதே பிரிவில் அணி போட்டியில் இளவேனில் வளரிவன், மொஹாலி கோஷ் அணி உலக சாதனையுடன் தங்கம் வென்றது ) ( தற்போது இந்தியா 6 தங்கம் உடப்ட 14 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களுடன் சீனா 2வது இடத்தையும் பெற்றுள்ளன )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

No comments:

Post a Comment